இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 22 இலட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (SLTDA) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, 2025 ஜனவரி 1 முதல் டிசம்பர் 21 வரை மொத்தமாக 22,58,202 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
இந்தியர்கள் முதலிடம்
இவ்வாறு நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் அதிகமானோர் இந்தியப் பிரஜைகள் ஆகும்.
அதன்படி,
-
இந்தியா – 5,10,133 பேர்
-
பிரித்தானியா – 2,04,703 பேர்
-
ஜெர்மனி – 1,41,941 பேர்
-
சீனா – 1,29,403 பேர்
என்ற அடிப்படையில் சுற்றுலாப் பயணிகள் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலாக பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலிருந்தும் குறிப்பிடத்தக்க அளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
டிசம்பர் மாத வருகை
மேலும், டிசம்பர் மாதத்தின் முதல் 21 நாட்களில் மட்டும்
1,54,609 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.
சுற்றுலா துறை மீட்பு
சுற்றுலாப் பயணிகளின் இந்த அதிகரிப்பு, நாட்டின் பொருளாதார மீட்சிக்கு முக்கிய பங்களிப்பாக அமைந்துள்ளதாகவும், வரவிருக்கும் காலத்தில் சுற்றுலா வருமானம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

