அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று இன்று (25) காலை விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று காலை சுமார் 7.00 மணியளவில், மஹிந்தபுர சந்திக்கு அருகில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பேருந்தில் 25-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்திருந்த நிலையில், சாரதி திடீரென கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக பேருந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10-க்கும் மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். காயமடைந்தவர்கள் அப்பகுதி மக்களின் உதவியுடன் உடனடியாக மீட்கப்பட்டு, சேருநுவர வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிப்பதன்படி, காயமடைந்த அனைவரும் உயிர் ஆபத்திலிருந்து மீண்ட நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை எவருக்கும் பாரிய உயிரிழப்பு அல்லது கடுமையான காயங்கள் ஏற்படவில்லை.

இந்த விபத்து தொடர்பாக சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply