ஆந்திராவை சேர்ந்த பெண் ஒருவர், 19 வயதில் 8 திருமணங்கள் செய்து, அவர்களை ஏமாற்றியிருக்கும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.

ஆந்திராவின் ஸ்ரீகாகுலம் என்கிற மாவட்டத்தில்தான் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. அங்கு வசிக்கும் 19 வயது பெண்தான், திருமணம் என்கிற பெயரில் மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம், பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஒரு 19 வயது பெண் இதை செய்தது எப்படி? அவருக்கு இந்த மோசடியில் துணையாக நின்றவர்கள் யார்? முழு விவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

19 வயதில் 8 திருமணங்கள்!

ஆந்திராவை சேர்ந்த வாணி என்கிற 19 வயது பெண், இச்சாபுரம் பகுதியில் வசித்து வருகிறார்.

இந்த பெண், தனது உறவினர் பெண் சந்தியா என்பவருடன் திருமணம் ஆகாத ஆண்களுக்கு வலைவீசி, அவர்களை திருமணம் என்கிற பெயரில் ஏமாற்றுவதாக போலீசாருக்கு புகார் வந்துள்ளது.

அப்படி திருமணம் செய்த ஆண்களை அவர் சுருட்டிக்கொள்ள வேண்டியதை சுருட்டிக்கொண்டு பின்பு எஸ்கேப் ஆகி விடுவதாகவும், அப்படி அவர் திருடிக்கொண்டு ஓடும் பொருட்களில் பணம், நகை மற்றும் இன்னும் சில விலை மதிப்புமிக்க ஆபரணங்கள் இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.

வாணி, திருமணம் செய்ய தயாராக இருக்கும் ஆண்களைத்தான் தனது டார்கெட் ஆக தேர்ந்தெடுப்பாராம். திருமணத்திற்கான பணத்தை யார் திருமணத்திற்கு முன்பே தருகின்றனரோ அவர்களை கல்யாணம் செய்து கொண்டு, சில நாட்களில் தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்காமல் மாயமாய் மறைந்து விடுவாராம்.

இது குறித்து விசாரிக்கும் போலீசார், இவர் இதனை ஒரு Pattern ஆக செய்து வருவதாக தெரிவித்து இருக்கின்றனர்.

சமீபத்தில், வாணி கர்நாடகாவில் உள்ள துர்கா தேவி கோவிலில் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். பின்பு, திருமணம் முடித்து பயணிக்கும் போது விசனிங்கபுரம் ரயில் நிலையத்தில் அவர் கழிவறையை உபயோகிக்க வேண்டும் என்று கூறி இறங்கியதாகவும் அதன் பிறகு தங்களுடன் வரவே இல்லை என்றும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் சொல்வது!

காணாமல் போன வாணியை, திருமணம் செய்த அந்த நபர் தேடியிருக்கிறார். பின்னர், இச்சாபுரத்தில் உள்ள தனது உறவினர் பெண் வீட்டில் அவர் இருந்ததாக தெரிகிறது.

இந்த சமயத்தில், திருமணம் செய்த அந்த நபர் ரூ.1 லட்சத்தினை அப்பெண்ணுக்கு கொடுத்திருக்கிறார்.

இந்த பணத்துடன் சேர்த்து, துணி மற்றும் திருமணத்திற்கான செலவுகள் என்று அனைத்தையும் கொடுத்திருக்கிறார். இது குறித்து அவரது உறவினர் பெண்ணிடம் கேட்டதற்கு, சீக்கிரமாக அந்த பணத்தை தருவதாக கூறிவிட்டு பின்னர் மாயமாகி விட்டார்.

நாகி ரெட்டி மற்றும் கேஷவா ரெட்டி என இரண்டு பேர் இச்சாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் ஆராய்ந்ததில் பல போட்டோ மற்றும் வீடியோ ஆதாரங்கள் கிடைத்திருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது எட்டு பேரை அவர் ஏமாற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது.

உறவினர் பெண்ணால்..

இந்த 19 வயது வாணியையும் அவரது உறவினர் பெண்ணையும் இச்சாபுரம் காவலர்கள் தேடி வருகின்றனர்.

இதில், அந்த உறவினர் பெண் பெரிதாக தலையிட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அந்த பெண்ணின் தந்தை, அவரை தான் வளர்க்கவே இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னர் நடந்த திருமணங்களின் போது, அந்த பெண் 18 வயதிற்கு கீழான பெண்ணாக இருந்தாராம். இது குறித்த விசாரணை தற்போது நடைப்பெற்று வருகிறது.

Share.
Leave A Reply