இலஞ்ச ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் நேற்று (31) மாலை கிண்ணியா பொலிஸ் நிலையத்தினுள் வைத்து இந்த விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
சம்பவம் குறித்த விபரங்கள்:
-
கைது பின்னணி: கிண்ணியா பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வழங்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. முறைப்பாட்டாளர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக சந்தேகநபர்களைக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக, குறித்த பொலிஸ் அதிகாரி 10,000 ரூபாயை இலஞ்சமாகக் கோரியுள்ளார்.
-
கையும் மெய்யுமாகச் சிக்கினார்: இந்தப் பணத்தை வேறொரு நபர் ஊடாகப் பெற்றுக்கொள்ள முயன்ற போதே, அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஊழல் ஒழிப்பு அதிகாரிகள் குறித்த உப பொலிஸ் பரிசோதரரை நள்ளிரவுக்குச் சற்று முன்னதாகக் கைது செய்தனர்.
-
நீதிமன்ற நடவடிக்கை: கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

