இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ள 15 பேர் கொண்ட குழாத்தில் யாழ்ப்பாண மண்ணைச் சேர்ந்த இரு இளம் வீரர்கள் தெரிவாகி பெருமை சேர்த்துள்ளனர்:
-
விக்னேஸ்வரன் ஆகாஷ்: பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும், தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரியின் வீரருமானவர்.
-
குகதாஸ் மாதுளன்: யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் நட்சத்திர வீரர்.
போட்டி விபரங்கள்
இந்தத் தொடர் ஜனவரி 15 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இலங்கை அணி ‘ஏ’ (Group A) பிரிவில் இடம்பெற்றுள்ளது.
| திகதி | எதிரணி | மைதானம் |
| ஜனவரி 17 | ஜப்பான் | விண்ட்ஹோக், நமிபியா |
| ஜனவரி 19 | அயர்லாந்து | விண்ட்ஹோக், நமிபியா |
| ஜனவரி 23 | அவுஸ்திரேலியா | விண்ட்ஹோக், நமிபியா |
இலங்கை குழாம் (Sri Lanka Squad)
-
தலைவர்: விமத் தின்சார (றோயல் கல்லூரி)
-
உதவித் தலைவர்: கவிஜ கமகே (கிங்ஸ்வூட் கல்லூரி)
-
ஏனைய வீரர்கள்: திமன்த மஹாவித்தான, ஆதம் ஹில்மி, செத்மிக்க செனவிரட்ன, விரான் சமுதித்த, சமரிந்து நெத்சார, துல்னித் சிகேரா, சாமிக்க ஹீனட்டிகல, குகதாஸ் மாதுளன், ரசித் நிம்சார, விக்னேஸ்வரன் ஆகாஷ், சேனுஜ வேக்குனாகொட, ஜீவன்த ஸ்ரீராம், மலின்த சில்வா.

