நாட்டில் நிலவும் பேரிடர் சூழ்நிலை மற்றும் சேதமடைந்துள்ள போக்குவரத்து வசதிகளைக் கருத்திற்கொண்டு, 2026-ஆம் ஆண்டில் பாடசாலை நேரத்தை நீடிக்கப் போவதில்லை என கல்வி அமைச்சு நேற்றிரவு (01.01.2026) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

  • பாடசாலை நேரம்: 5-ஆம் வகுப்பு முதல் 13-ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை பாடசாலை நேரம் எவ்வித மாற்றமுமின்றித் தொடரும்.

  • ஆரம்பம்: அரச மற்றும் தனியார் பாடசாலைகளின் 2026-ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை ஜனவரி 5-ஆம் திகதி ஆரம்பமாகும்.

  • பாடங்களின் எண்ணிக்கை: 6 முதல் 13-ஆம் வகுப்பு வரை நாளொன்றுக்கு 7 பாடங்கள் கற்பிக்கப்படும் (ஒரு பாடத்திற்கு 45 நிமிடங்கள்).

  • கல்வி மறுசீரமைப்பு: 1-ஆம் வகுப்பு மற்றும் 6-ஆம் வகுப்புகளுக்குப் புதிய கல்வி சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படவுள்ளன.

    • 6-ஆம் வகுப்பு: கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21-இல் ஆரம்பம்.

    • 1-ஆம் வகுப்பு: மாணவர் பதிவுகள் ஜனவரி 5-இல் ஆரம்பமாகி, கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 29-இல் முறையாகத் தொடங்கும்.

  • பாடப்புத்தகங்கள்: 1 மற்றும் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் மற்றும் செயல்முறைப் புத்தகங்கள் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பே விநியோகிக்கப்படும். ஏனைய வகுப்புகளுக்கு விநியோகம் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளது.

  • உயர்தரப் பரீட்சை: 2025 க.பொ.த உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பகுதிகள் ஜனவரி 12 முதல் 20 வரை நடைபெறும்.

இயல்பு நிலை திரும்பும் வரை பாடசாலை நேரத்தை நீடிக்காமல் பழைய நேரத்தையே பின்பற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply