எதிர்கால நிகழ்வுகளைத் துல்லியமாகக் கணிப்பதில் உலகப்புகழ் பெற்றவர் பிரெஞ்சு தீர்க்கதரிசி நாஸ்டர்டாமஸ். ஹிட்லரின் வருகை, பிரெஞ்சு புரட்சி போன்றவற்றை முன்னரே கணித்ததாகக் கருதப்படும் இவரது 2026-ஆம் ஆண்டுக்கான கணிப்புகள் தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளன.
நாஸ்டர்டாமஸின் கணிப்பின் படி 2026-இல் எதிர்பார்க்கப்படுபவை:
-
3-ஆம் உலகப்போர்: உலக நாடுகளிடையே நிலவும் உச்சகட்டப் பதற்றம் 2026-இல் ஒரு பெரும் போராக மாற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இது மிக பாரிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
-
கடல்சார் மோதல்: 2026-இல் கடற்படை அல்லது கடல்சார் பகுதியில் ஒரு பெரிய சம்பவம் நிகழும். குறிப்பாக, ஒரு நாட்டின் தவறான அரசியல் முடிவால் ஒரு பெரும் கப்பல் மூழ்கடிக்கப்படலாம் என்றும், அது உலகளாவிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்றும் கணித்துள்ளார்.
-
பொருளாதார வீழ்ச்சி: அமெரிக்கா, பிரித்தானியா போன்ற உலக வல்லரசுகள் கடும் பொருளாதாரச் சரிவைச் சந்திக்கும். இதன் காரணமாக வேலைவாய்ப்பு இழப்பு, வரலாறு காணாத பணவீக்கம் மற்றும் சமூக அமைதியின்மை ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் குழப்பம்: முக்கிய நாடுகளின் தவறான இராணுவ முடிவுகள் உலகையே போரின் விளிம்பிற்குத் தள்ளும் எனக் கூறப்படுகிறது.
இருப்பினும், இவை அனைத்தும் தீர்க்கதரிசனங்களாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்றும், நவீன கால அரசியல் நகர்வுகளே எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

