காலி, அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓலகம பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
-
சம்பவம்: ஓலகம பிரதேசத்தில் நிர்மாணப் பணிகள் நடைபெற்று வரும் 18 மாடிகளைக் கொண்ட கட்டிடத்தின் 15-ஆவது மாடியில் இருந்து நேற்று (ஜனவரி 02) பிற்பகல் இந்தச் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
-
அடையாளம்: உயிரிழந்தவர் யார்? அவர் எவ்வாறு 15-ஆவது மாடிக்குச் சென்றார்? என்பது குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
-
தற்போதைய நிலை: சடலம் தற்போது பலபிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
-
விசாரணை: இது தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

