இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு (CIABOC), 2025-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகள் மற்றும் கைதுகள் குறித்த உத்தியோகபூர்வ தரவுகளை வெளியிட்டுள்ளது.

  • கைதுகள்: கடந்த ஆண்டில் மட்டும் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டின் பேரில் 76 அரச அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • பொலிஸார் முன்னிலை: கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பொலிஸ் அதிகாரிகள் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

  • அரசியல்வாதிகள்: 2025 நவம்பர் வரையிலான காலப்பகுதியில், ஊழல் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டதாக 7 அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  • முறைப்பாடுகள்: கடந்த 11 மாதங்களில் மாத்திரம் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து 7,811 முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்குக் கிடைத்துள்ளன.

Share.
Leave A Reply