2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிற்கான மின் கட்டணத் திருத்த முன்மொழிவை இலங்கை மின்சார சபை (CEB), பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.
-
முன்மொழியப்பட்ட உயர்வு: ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலப்பகுதிக்கு 11.57 சதவீதக் கட்டண உயர்வை மின்சார சபை கோரியுள்ளது.
-
கட்டண மாற்றங்கள் (உத்தேச விபரங்கள்):
-
0 – 30 யூனிட்கள்: ரூபா 4.50-லிருந்து ரூபா 5.29 ஆக உயரும்.
-
31 – 60 யூனிட்கள்: ரூபா 8-லிருந்து ரூபா 9.41 ஆக உயரும்.
-
61 – 90 யூனிட்கள்: ரூபா 12.75-லிருந்து ரூபா 15 ஆக உயரும்.
-
91 – 120 யூனிட்கள்: ரூபா 24-லிருந்து ரூபா 28 ஆக உயரும்.
-
-
காரணங்கள்: மின்சார சபையின் கடன் சுமை, எரிபொருள் விலை மாற்றங்கள், ஊழியர் இழப்பீட்டுத் தொகை மற்றும் நீர்த்தேக்கங்களில் போதிய நீர் மட்டம் இல்லாமை ஆகியவற்றை மின்சார சபை காரணங்களாகக் காட்டியுள்ளது.
-
எதிர்ப்பு: ‘டிட்வா’ சூறாவளியால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில், இந்த உயர்வு மக்களை மேலும் துயரத்தில் தள்ளும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடியுள்ளார். மேலும், கட்டணத் திருத்தக் காலத்தை 3 மாதங்களிலிருந்து 6 மாதங்களாக நீட்டிக்கவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

