கொழும்பு மாநகர சபையின் 2026-ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் (Budget) இரண்டாவது முயற்சியில் வெற்றிகொள்ளப்பட்டுள்ளதாக மேயர் விராய் கெலி பல்தசார் தெரிவித்துள்ளார்.
-
பின்னணி: கடந்த மாதம் 22-ஆம் திகதி முதன்முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போது வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. இதனையடுத்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென மேயர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
-
வெற்றி: கடந்த 31-ஆம் திகதி மீண்டும் சமர்ப்பிக்கப்பட்ட போது, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 3 உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்ததுடன், ஒரு பெண் உறுப்பினர் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
-
மேயரின் வரவேற்பு: ஆதரவாக வாக்களித்த பெண் உறுப்பினரின் துணிச்சலான முடிவை பாராட்டியுள்ள மேயர், அவர் தனது தொகுதி மக்களின் நலனுக்காகவே இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த உறுப்பினரின் தொகுதியை அபிவிருத்தி செய்ய முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

