எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், ஒரு நடிகராக அவர் நடிக்கும் கடைசி படம் என்பதால் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு மூத்த பத்திரிகையாளர் பகிர்ந்துள்ள தகவலின்படி, படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் விபரங்கள் இதோ:

 பட்ஜெட் மற்றும் லாபக் கணக்கு

  • படத்தின் பட்ஜெட்: சுமார் ரூ. 352.60 கோடி

  • மொத்த பிசினஸ்: சுமார் ரூ. 452 கோடி

  • தயாரிப்பாளரின் லாபம் (Pre-release): சுமார் ரூ. 99.40 கோடி

திரையரங்க உரிமை (Theatrical Rights)

பகுதி உரிமைத் தொகை (தோராயமாக)
தமிழ்நாடு ரூ. 105 கோடி
கேரளா ரூ. 15 கோடி
கர்நாடகா ரூ. 20 கோடி (KVN சொந்த ரிலீஸ் ஷேர்)
ஆந்திரா & தெலுங்கானா ரூ. 12 கோடி
வட இந்தியா ரூ. 9 கோடி
வெளிநாடு (Overseas) ரூ. 78 கோடி

இதர உரிமைகள் (Non-Theatrical Rights)

  • டிஜிட்டல் (OTT) உரிமை: ரூ. 120 கோடி (அமேசான் பிரைம் வீடியோ எனத் தகவல்)

  • சாட்டிலைட் (TV) உரிமை: ரூ. 64 கோடி (ஜீ தமிழ்)

  • ஆடியோ உரிமை: ரூ. 29 கோடி

Share.
Leave A Reply