இந்திய சினிமாவின் ‘குயின்’ என்று அழைக்கப்படும் தீபிகா, நடிப்பில் மட்டுமின்றி ஒரு வெற்றிகரமான தொழிலதிபராகவும் தன்னை நிலைநிறுத்தியுள்ளார்.

  • சொத்து மதிப்பு: பாலிவுட் வட்டாரத் தகவல்களின்படி, இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 500 கோடி ஆகும். இதன் மூலம் இந்திய சினிமாவில் அதிக சொத்துடைய முதல் 10 நடிகைகளின் பட்டியலில் இவர் இடம்பிடித்துள்ளார்.

  • சம்பளம்: ஒரு படத்திற்கு ரூ. 15 கோடி முதல் ரூ. 30 கோடி வரை இவர் சம்பளமாகப் பெறுகிறார். இது தவிர விளம்பரங்களில் நடிக்க ரூ. 7 கோடி முதல் ரூ. 10 கோடி வரை வசூலிக்கிறார்.

  • இல்லம்: மும்பை பாந்த்ராவில் ஷாருக்கானின் ‘மன்னத்’ இல்லத்திற்கு அருகாமையில், கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ரூ. 119 கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களாவில் வசித்து வருகிறார். மேலும் அலிபாக் பகுதியில் ரூ. 22 கோடி மதிப்பிலான ஒரு பண்ணை வீடும் இவருக்கு உள்ளது.

  • புதிய முயற்சி (OnSet): தனது 40-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, திரையுலகில் பின்னணியில் பணியாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு (Technicians) பயிற்சியும் ஆதரவும் வழங்கும் ‘OnSet’ என்ற புதிய திட்டத்தை இன்று அவர் அறிமுகப்படுத்தியுள்ளார்.

  • தனிப்பட்ட வாழ்க்கை: கடந்த 2024 செப்டம்பரில் தீபிகா – ரன்வீர் தம்பதிக்கு ‘துவா’ (Dua) என்ற பெண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply