தாழமுக்கத்தின் நகர்வு காரணமாக நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மற்றும் கடல் அலைகளின் சீற்றம் சடுதியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
காற்றின் வேகம்: நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும். குறிப்பாக பேருவளையிலிருந்து கொழும்பு, புத்தளம், காங்கேசந்துறை, திருகோணமலை மற்றும் பொத்துவில் ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.
-
கடல் அலைகள்: காங்கேசந்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் கடல் அலைகள் 2.5 மீற்றர் முதல் 3.0 மீற்றர் உயரம் வரை மேலெழும்பக்கூடும்.
-
மீனவர்களுக்கான அறிவுறுத்தல்: கிழக்கு மற்றும் வடக்கு கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மீனவர்கள் மற்றும் கடலில் ஈடுபடுவோர் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
-
தாக்கம்: திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் ஊடுருவும் அபாயம் உள்ளதால், மீனவர்கள் தமது படகுகளைப் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தி வருகின்றனர்.

