ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பல ஆண்டுகளாக நிலவி வந்த மர்மத்தை உடைத்துள்ளார்.
-
உயிருடன் இருப்பதாக தகவல்: சாரா ஜஸ்மின் சாய்ந்தமருது குண்டுவெடிப்பில் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்ட போதிலும், அவர் தற்போதும் உயிருடன் இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக அமைச்சர் உறுதிப்படுத்தினார்.
-
இந்தியா குறித்த வதந்தி: அவர் இந்தியாவில் இருப்பதாகக் கடந்த காலங்களில் பரவிய தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
-
ரகசிய விசாரணை: சாரா ஜஸ்மின் எங்கு இருக்கிறார்? அவரை எவ்வாறு இலங்கைக்குக் கொண்டு வருவது? என்பது குறித்துத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
-
தகவல் பாதுகாப்பு: விசாரணைகளின் நுணுக்கம் கருதி மேலதிக தகவல்களை இப்போது வெளியிட முடியாது என்றும், அவ்வாறு வெளியிடுவது குற்றவாளிகள் தப்பிச் செல்ல வழிவகுக்கும் என்றும் அமைச்சர் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

