கேரளா, ஆலப்புழா மாவட்டம் – விபத்தில் உயிரிழந்த யாசகர் அனில் கிஷோர் என்பவரின் பையில் இருந்து நான்கரை லட்சம் ரூபாய் மற்றும் சில சவுதி ரியால்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
நிகழ்வு சரும்மூடு பகுதியில் இடம்பெற்றுள்ளது. அனில் கிஷோர் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும், இரவோடு இரவாக அவர் வைத்தியசாலையிலிருந்து தப்பியோடியுள்ளார்.
அடுத்த நாள் காலை, அவர் வீதியோரில் உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டார். அவரது உடைமைகள் பொலிஸார் பரிசோதனையில் நாணய நோட்டுகள் மற்றும் சவுதி ரியால்கள் இருப்பது தெரியவந்தது.
இந்த பை மற்றும் அதில் இருந்த பணம் தற்போது நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்ததுடன், யாசகர் வாழ்க்கையில் இருந்த மிகப்பெரிய நாணய தொகை மீட்பில் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

