வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பின்படி, வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது நாளை (09.01.2026) மாலை 5.30 மணிக்குப் பிறகு ஹம்பாந்தோட்டை மற்றும் கல்முனை பகுதிகளுக்கு இடையில் இலங்கையின் கரையை ஊடறுத்துச் செல்லும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எச்சரிக்கை முக்கிய அம்சங்கள்:

  • மக்கள் மற்றும் கடற்படை சமூகத்தினருக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  • கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் 150 மி.மீக்கும் அதிகமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

  • முல்லைத்தீவு, வவுனியா, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 100 – 150 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • யாழ்ப்பாணம், மன்னார், ஊவா மாகாணம், மத்திய மாகாணம் பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

  • நாட்டில் கடற்றொழில் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளை, மறு அறிவித்தல் வரும்வரை நிறுத்துமாறு மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நீர்த்தேக்க நிலை:

  • 26 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 24 மத்திய அளவிலான நீர்த்தேக்கங்கள் வான் பாயும் நிலையை அடைந்துள்ளன.

  • கலாவெவ், கண்டலம்வெவ், மாதுரு ஓயா, ராஜாங்கனய, விக்டோரியா, ரந்தெணிகல, மொரகஹகந்த, கலு கங்க ஆகிய நீர்த்தேக்கங்கள் வான் பாயும் நிலை பெற்றுள்ளன.

மக்களுக்கு அறிவுரை:

  • வளிமண்டலவியல் திணைக்களத்தின் எச்சரிக்கைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருப்பது அவசியம்.

  • ஆறுகள் மற்றும் குளங்களை அண்மித்த பகுதிகளில் வசிப்பவர்கள் வெள்ளப்பெருக்குக்கு முன்கூட்டியே முன்னேற்பாடு மேற்கொள்ள வேண்டும்.

  • வங்காள விரிகுடா காரணமாக நாட்டில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கின் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த எச்சரிக்கை இன்று (08) காலை 10.30 மணிக்கு வெளியிடப்பட்டு, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும்.

Share.
Leave A Reply