நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

  • சம்பவத்தின் பின்னணி: கடந்த டிசம்பர் மாதம் ஒவ்வாமை (Allergy) காரணமாக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி டினோஜா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 21-ஆம் திகதி உயிரிழந்தார்.

  • கிடைக்கப்பெற்ற அறிக்கைகள்: இந்த மரணம் குறித்து வைத்தியசாலை மட்டத்திலும், மாகாண சுகாதார அமைச்சு மட்டத்திலும் நடத்தப்பட்ட ஆரம்பகட்ட விசாரணை அறிக்கைகள் தற்போது மத்திய சுகாதார அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

  • அசமந்தப் போக்கு விசாரணை: சிறுமியின் மரணத்திற்கு வைத்தியசாலை ஊழியர்களின் அல்லது மருத்துவர்களின் கவனக்குறைவு (Negligence) காரணமா என்பது குறித்து இந்த அறிக்கைகளின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

  • அமைச்சரின் உறுதிமொழி: சிறுமியின் மரணத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அமைச்சர், விசாரணைகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் அதன் முக்கிய முடிவுகளை வரும் நாட்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாக உறுதியளித்தார்.

Share.
Leave A Reply