இந்தியாவை சேர்ந்த பிரபல நடிகர் ஒருவர், வீட்டை விட்டு கையில் வெறும் 300 ரூபாயுடன் ஓடி வந்தவராக இருக்கிறார். அந்த நடிகர் யார் தெரியுமா?
Actor Worked In Tea Shop Now Pan Indian Star : சினிமாவை பொறுத்தவரை, ஒரு சில நடிகர்கள் மளமளவென வளர்ந்து வருவது போல இருக்கும்.
ஆனால், சில ஆண்டுகளில் திரும்பி பார்த்தால் அவர்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் காணாமல் போயிருப்பர்.
அதே போல, அட்ரஸே இல்லாமல் வந்தவர்களும், தங்களின் கடின முயற்சியாலும், தங்களுக்கு அமைந்த நல்ல நேரத்தாலும் இந்தியாவின் டாப் ஸ்டார் ஆகிவிடுவர். அப்படி, கையில் கொஞ்சமாக காசை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடி வந்த ஒரு நடிகர்,
இப்போது சுமார் ரூ.1,000 கோடி வரை வசூல் பெரும் படத்தின் ஹீரோவாக இருக்கிறார். இன்று இவரை நம்பி, பல இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் பெருவாரியான பணத்தையும் உழைப்பையும் போடுகின்றனர். அப்படிப்பட்ட அந்த ஹீரோ, யார் தெரியுமா?
ரூ.300 உடன் வீட்டை விட்டு வெளியேறிய நடிகர்!
சினிமா மீது தீராத தாகம் கொண்டவர்கள், கையில் கொஞ்சம் காசை எடுத்துக்கொண்டு, பெருநகரமாக இருக்கும் இடங்களுக்கு வந்து விடுவர். அங்கு சென்று ஏதேனும் வாய்ப்பு தேடி கொள்ளலாம் என்றும் அவர்களுக்கு தோன்றும். அப்படி, கையில் வெறும் ரூ.300-ஐ எடுத்துக்கொண்டு ஒரு இளைஞன் பெங்களூருவிற்கு வந்திருக்கிறார். அந்த இளைஞர் வேறு யாருமில்லை, நடிகர் யாஷ்தான்.
பாக்கெட்டில் 300 ரூபாயை வைத்துக்கொண்டு பெங்களூருவுக்கு வந்த அவருக்கு வாழ்க்கை அவ்வளவு சாதாரணமானதாக இல்லை.
ஒரு படத்தில் இணை இயக்குநராக வேலை பார்ப்பதற்காக அவர் பெங்களூருவிற்கு வந்தார். ஆனால், அந்த படம் 2 நாட்களில் கேன்சல் செய்யப்பட்டது.
இதனால், சாப்பிடுவதற்கும் தங்குவதற்கும் இடமே இல்லாமல் சிரமப்பட்ட அவர், டீ கடையில் வேலை செய்வது, கிடைக்கும் இடத்தில் படுத்துக்கொள்வது என இருந்திருக்கிறார்.
இதற்கிடையில், வெவ்வேறு படங்களுக்கான ஆடிஷனிலும் கலந்து கொண்டுள்ளார். ஆனால், அவற்றில் எல்லாம் அவருக்கு தோல்விதான் கிடைத்துள்ளன.
இப்போது ரூ.1000 கோடி வசூலிக்கும் படத்தின் நாயகன்!
சினிமாவிற்குள் எந்த வித பெரிய கைகளின் தொடர்பும் இன்றி நுழைவது, அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்த யாஷ், தன்னை உயர்த்திக்கொள்ள படாத பாடுபட்டார்.
அவரது நம்பிக்கை அவருக்கு ஜம்பாடா ஹடுகி எனும் படம் மூலம் கைக்கொடுத்தது. ஆனாலும், இவர் சினிமாவிற்கு வந்து ஆரம்பத்தில் நடித்த ராக்கி, காலரா சாந்தே, கோகுலா உள்ளிட்ட படங்கள் ஓடவில்லை. விமர்சனத்திலும் வசூலிலும் சறுக்கியது. இருப்பினும் கண்டிப்பாக தனக்கான ஒரு காலம் வரும் என அவர் காத்திருந்தார்.
அப்போதுதான், அவருக்கு ஜானு எனும் ஹிட் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து, சில ஹிட் படங்களில் நடித்து ஹீரோவாக வளர ஆரம்பித்த அவருக்கு, 2018ல் பிரசாந்த் நீல் இயக்கிய கே.ஜி.எஃப் படத்தில் ‘ராக்கி பாய்’ கதாப்பாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த படம், இந்திய அளவில் இவ்வளவு பெரிய ஹிட் அடிக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏன், யாஷுமே எதிர்பார்த்திருக்க மாட்டார். அப்படம் இமாலய வெற்றி பெற்று சுமார் ரூ.1000 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது.
இரண்டாவது பாகமாக உருவான கே.ஜி.எஃப் 2வும் நல்ல வரவேற்பை பெற்று, முதல் படத்தை விட அதிக வசூலை பெற்றது. இதனால், யாஷின் மார்கெட் ராக்கெட் வேகத்தில் ஏற்றம் கண்டது. தனது படங்களுக்கு லட்சங்களில் சம்பளம் வாங்கி கொண்டிருந்த அவர், இப்போது பல கோடிகளை வாங்குகிறார்.
டாக்ஸிக்:
கீது மோகன்தாஸ் இயக்கத்தில், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் ‘டாக்ஸிக்’ படத்தில் கேங்ஸ்டர் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீசர் பல மில்லியன் வியூஸ்களை இட்டியது. அதே சமயத்தில் படத்தின் ஹீரோ யாஷ்,
ஏதோ ஒரு பெண்ணுடன் கல்லறைக்கு அருகே உடலுறவு வைத்துக்காெள்வது போல இருந்த காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியது. இருப்பினும், இவருக்கான ஆதரவு இன்னும் பெருகிக்கொண்டுதான் இருக்கிறது.

