தையிட்டி திஸ்ஸ விகா ரையில் வைப்பதற்காக கண்டியில் இருந்து எடுத் துவரப்பட்ட இரண்டு அடி உயரமான புத்தர் சிலையையும் அதனை கொண்டுவந்த பௌத்த பிக்குவையும் பொலிஸார்
நேற்று சனிக்கிழமை திருப்பி அனுப்பினர் .

குறித்த சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கண்டியில் இருந்து பிக்கு ஒருவர் திஸ்ஸ விகாரையில் தையிட்டிக்கு வைப்பதற்காக புத்தர் சிலை ஒன்றை யாழ்ப்பாணம் பேருந் தில் எடுத்து வந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து முச்சக்கர வண்டி ஊடாக தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எடுத்து வந்த நிலையில் விகாராதிபதி அனுமதிக்காத காரணத்தால் அருகில் உள்ள இராணுவ முகாம் சிற்றுண்டிசாலையில் வைத்துள்ளார்.

குறித்த விட யம் பொலிஸாருக்கு தெரிவிக் கப்பட்ட நிலையில் புத்தர் சிலையை எடுத்து வந்த பிக்கு வையும் சிலையையும் திருப்பி அனுப்பியுள்ளனர்

Share.
Leave A Reply