வவுனியா கனகராயன்குளம் பெரியகுளம் பகுதியில் கிணற்றில் இருந்து இளம் கணவன், மனைவியின் சடலங்கள் மீட்கப்பட் டுள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், குறித்த கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டில் இருந் துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு கார ணமாக இருவரும் கிணற்றில் வீழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதனால் நீரில் மூழ்கி இருவ ரும் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் அதேபகுதியை
சேர்ந்த கிருசாந்தன் (வயது-22) இ நிசாந்தினி (வயது-19) ஆகிய இளம் தம்பதியே சடல மாக மீட்கப்பட்டுள்ளனர்.

சம் பவம் தொடர்பாக கனகராயன் குளம் பொலிஸார் விசாரணை களை முன்னெடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply