அதிகாரம் மனிதர்களை மாற்றும் என்பார்கள், ஆனால் உண்மை நட்பு என்றும் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் செயல் அமைந்திருந்தது. அண்மையில் அனுராதபுரத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர், தனது பாதுகாப்பு வாகனங்கள் புடைசூழச் சென்று கொண்டிருந்தபோது, கூட்டத்தில் நின்றிருந்த தனது பழைய நண்பரான ‘ராஜா’ என்பவரைக் கண்டுள்ளார்.

உடனடியாக தனது வாகனத்தை நிறுத்தச் சொன்ன ஜனாதிபதி, கண்ணாடியை இறக்கி நண்பனின் கையைப் பிடித்து, “ஆ ராஜா! நான் உன்னைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்…” என மிகவும் எதார்த்தமாக நலம் விசாரித்துள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருந்தபோதும், தனது பழைய காலத்துத் தோழனை அடையாளம் கண்டு அவர் காட்டிய இந்த எளிமையும், பண்பும் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “பதவி வந்தாலும் பழைய நட்பை மறக்காத மனிதர்” எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து ஜனாதிபதிக்குத் தங்கள் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply