இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (12) இரவு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ (Amber) நிற எச்சரிக்கையை விடுத்துள்ளது. இன்று நண்பகல் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு, இரவு 11.00 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மேற்கு, வடமேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். இச்சமயங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதால், மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் அவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Share.
Leave A Reply