இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (12.01.2026) ஒரே நாளில் 3,000 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டில் உலக சந்தையில் சுமார் 60% வரை அதிகரித்த தங்கத்தின் விலை, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் தொடர்ந்து ஏறுமுகமாகவே காணப்படுகிறது.

இன்றைய நிலவரப்படி கொழும்பு சந்தையில் தங்கத்தின் விலை விபரம் பின்வருமாறு:

இன்றைய தங்கம் விலை நிலவரம் (12-01-2026):

தங்கத்தின் வகை ஒரு பவுன் (8 கிராம்) விலை ஒரு கிராம் விலை
24 கரட் தங்கம் ரூ. 365,000 ரூ. 45,625
22 கரட் தங்கம் ரூ. 337,600 ரூ. 42,200

விலை உயர்விற்கான காரணங்கள்:

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரிப்பு மற்றும் டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சர்வதேச அளவில் நிலவும் புவிசார் அரசியல் சூழல்கள் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிக ஆர்வம் காட்டி வருவதால், எதிர்வரும் நாட்களிலும் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Share.
Leave A Reply