பல்வேறு நிதி மோசடி குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வர்த்தகர் திலினி பிரியமாலிக்கு எதிராக ஹோமாகம நீதிவான் நீதிமன்றம் இன்று (12) பிடியாணை (Warrant) பிறப்பித்துள்ளது. அவர் மீது தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, திலினி பிரியமாலி தரப்பில் எந்தவொரு சட்டத்தரணியும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூன் மாதம் 15-ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிவான், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். முன்னதாக பல கோடி ரூபாய் நிதி மோசடி வழக்குகளில் கைதாகி இவர் பிணையில் விடுதலையாகியிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.

Share.
Leave A Reply