இயக்குநர் சுதா கொங்கரா மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவான வரலாற்று அரசியல் திரைப்படமான ‘பராசக்தி’, தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ராணா டகுபதி மற்றும் பேசில் ஜோசப் ஆகியோரின் கேமியோ காட்சிகள் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்துள்ள நிலையில், படம் வெளியாகி 2 நாட்களில் உலகளவில் ரூ. 45 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும், விடுமுறை நாட்களை முன்னிட்டு குடும்பங்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. சிவகார்த்திகேயனின் 25-வது படமான இது, வசூல் ரீதியாக ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.

