அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னைத்தானே ‘வெனிசுவேலாவின் தற்காலிக அதிபர்’ என்று அழைத்துக்கொண்டுள்ளார்.
டிரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் தனது புகைப்படத்தைப் பதிவிட்டு, அதன் அருகில் “வெனிசுலாவின் தற்காலிக அதிபர்” என்று பதிவிட்டிருந்தார்.
அமெரிக்கா – வெனிசுவேலா

ஜனவரி 3-ஆம் தேதி, அமெரிக்கா வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃபுளோரஸையும் சிறைபிடித்தது.
மதுரோ ஆயுத மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் அமெரிக்காவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதற்கிடையில், வெனிசுவேலாவில் முன்னாள் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தற்காலிக அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

