அமெரிக்காவின் பல மாகாணங்கள் பனிப் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ன. அங்கே தற்போது வரை 17 பேர் பலியாகி உள்ளனர்.
சில சந்தர்ப்பங்களில் உயிரிழப்புக்கான காரணங்களை அறிய முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பனிப் புயல் மற்றும் நடுங்க வைக்கும் குளிரால் பல மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான மழைப்பொழிவும் ஏற்பட்டு வருகிறது.
இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நியூ யார்க்கில் மட்டும் 379 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகள் மூடப்பட்டுள்ளன

