மீனா, கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி படம் நடிக்கும்போது முத்தகாட்சி எப்படி படமாக்கினார்கள் என்பது குறித்து பேசியுள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள நடிகை மீனா, முதல்முறையாக கமல்ஹாசனுடன் முத்தகாட்சி நடிக்கும்போது தான் பயந்ததாகவும், தனது அம்மாவிடம் இது குறித்து கமல்ஹாசனிடம் பேசுமாறு கூறியுள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, அதன்பிறகு ஹீரோயினாக பல வெற்றிப்படங்களை கொடுத்தவர் தான் மீனா. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாகவும்,

பின்னாளில் அவர்களுக்கே ஜோடியாகவும் நடித்திருந்த மீனா ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இருவருடனும் நடித்த நடிகை என்ற பெருமை பெற்றுள்ளார். தற்போது படங்களில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

இதனிடையே சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய மீனா, கமல்ஹாசனுடன் அவ்வை சண்முகி படம் நடிக்கும்போது முத்தகாட்சி எப்படி படமாக்கினார்கள் என்பது குறித்து பேசியுள்ளார்.

தமிழ் சினிமாவின் எவர்கிரீன் நாயகிகளில் ஒருவரான மீனா, உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்து நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘அவ்வை சண்முகி’. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட ஒரு மறக்க முடியாத அனுபவத்தைப் பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் மீனா பகிர்ந்துள்ளார்.

பொதுவாக அந்த காலகட்டத்தில் கமல்ஹாசன் படங்களில் ‘லிப்-லாக்’ (Lip-lock) காட்சிகள் இடம்பெறுவது வழக்கமான ஒன்று.

ஆனால், ‘அவ்வை சண்முகி’ படத்தில் முத்த காட்சி நடிக்கபோகிறோம் என்ற சிந்தனையே எனக்கு இல்லை. படப்பிடிப்பு தொடங்கிய இரண்டாவது நாளில், உதவி இயக்குனர், அடுத்ததாக ஒரு முத்தக் காட்சி (Kissing Scene) எடுக்கப்பட உள்ளதாக சொன்னார். இதைக் கேட்டவுடன் நான் அப்படியே உறைந்து போய்விட்டேன். எனக்கு அப்படியே பயம் வந்துவிட்டது.

லிப் லாக் காட்சியில் நடிப்பது குறித்து எனக்கு இதிலெல்லாம் துளியும் உடன்பாடு இல்லை, இது எனக்கு வசதியாக இருக்காது (I’m not comfortable). என்னால் இதைச் செய்யவே முடியாது என்று என் அம்மாவிடம் சொல்லிப் புலம்பினேன்.

இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் மிகவும் கண்டிப்பானவர் என்பதால், அவரிடம் நேரடியாகச் சென்று பேச பயமான இருந்தது.

அப்போது “அம்மா, நீங்கதான் எப்படியாவது டைரக்டரிடம் பேச வேண்டும் என்று என் அம்மாவிடம் கெஞ்சியுள்ளார்.

நான் பேசிக்கொண்டிருக்கும் போதே, படப்பிடிப்பு தளத்தில் “ஷாட் ரெடி” (Shot ready) என்ற குரல் கேட்டது. என்ன செய்வது என்று தெரியாமல், பயத்தில் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது என்று மீனா தனது அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

ஒரு பெரிய நடிகையாக இருந்தாலும், அந்தச் சூழலை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் அவர் தவித்த அந்தத் தருணம் குறித்து பேசியுள்ள வீடியோ பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Behindwoods (@behindwoodsofficial)

Share.
Leave A Reply