– சீனாவிலிருந்து இறக்குமதி செய்யும் கார்கள் கனடாவின் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாகவே அமையுமா?

 

கனடா சீன மின்சார வாகனங்களுக்கு (EV) விதித்திருந்த அதிக வரியை நீக்கியிருந்தாலும், அவை இன்னும் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தாகவே உள்ளன என்று பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முந்தைய கூட்டாட்சி அரசு கூறிய கவலைகளிலிருந்து இன்றுவரை எதுவும் மாறவில்லை என்றும் அவர்கள் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில், இணையத்துடன் (interne) இணைக்கப்பட்ட எந்த வாகனமாக இருந்தாலும் — அது சீனாவில் தயாரிக்கப்பட்டதா இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல் — சைபர் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை ஆபத்துகள் உள்ளன என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதற்காக மத்திய அரசு (ஒட்டாவா) வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

ஜனவரி 16-ஆம் தேதி பீஜிங்கில் கனடா பிரதமர் மார்க் கார்னி மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் கையெழுத்திட்ட புதிய வர்த்தக ஒப்பந்தத்தின் படி, 49,000 வரை சீன மின்சார வாகனங்கள் கனடாவுக்குள் 6.1% குறைந்த வரியுடன் அனுமதிக்கப்படும். இதற்குப் பதிலாக, சீனா கனடாவின் விவசாயப் பொருட்களுக்கு விதித்திருந்த வரிகளை நீக்க ஒப்புக்கொண்டுள்ளது.

Doug Ford

ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் (Ontario Premier Doug Ford) இந்த ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது மாகாணத்தின் வாகனத் தொழிலுக்கு மட்டுமல்ல, சீன மின்சார வாகனங்களால் ஏற்படும் சைபர் பாதுகாப்பு ஆபத்துகளுக்கும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். அவர் இந்த வாகனங்களை “உளவு வாகனங்கள்” என்று கூட அழைத்துள்ளார்.

நான் கற்பனை செய்து சொல்லவில்லை “நீங்கள் உங்கள் செல்போனை பயன்படுத்தும் போது, சீனர்கள்தான் உங்கள் தொலைபேசி உரையாடலை அவர்கள் கேட்கப் போகிறார்கள்,” என்று அவர் கடந்த வாரம் டொரோண்டோவில் நடந்த கிராமப்புற ஒன்டாரியோ மாநாட்டில் பேசும்போது கூறினார்.

நிபுணர்கள் கூறுவதாவது, இணையத்துடன் இணைக்கப்பட்ட சீன வாகனங்களை சீன அரசு அல்லது நிறுவனங்கள் பயன்படுத்தி, ஓட்டுநர்களின் தொலைபேசி உரையாடல்களை கேட்கவோ அல்லது அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பதை பதிவு செய்யவோ முடியும் என்ற அபாயம் உண்மையிலேயே உள்ளது. குறிப்பாக கனடாவில் வாழும் சீன வம்சாவளியினருக்கு இது ஒரு பெரிய கவலையாக உள்ளது.

மேலும், பெரிய அளவிலான சைபர் பாதுகாப்பு ஆபத்துகளும் உள்ளன என்று, கனடிய உளவு அமைப்பான CSIS-இல் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரியும், Global Intelligence Knowledge Network இயக்குநருமான நீல் பிஸ்சன் கூறினார்.

“இந்த வாகனங்களை நம்முடைய மின்சார அமைப்புடன் இணைப்போம். அதனால் தொடர்பு அமைப்புகளிலும், எரிசக்தி அமைப்புகளிலும் இன்னொரு வழி திறக்கப்படுகிறது,” என்று அவர் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

“சைபர் தாக்குதல்கள் நடத்தவும், முக்கியமான கட்டமைப்புகளை முடக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன. எல்லாம் அதில் உள்ளது,” என்றார் அவர்.

Carney

சீனாவுடன் செய்யப்பட்ட மின்சார வாகன (EV) ஒப்பந்தம் கனடாவாசிகளுக்கு EV -(electric vehicles vehicles) – கார்கள் மலிவாக கிடைக்க உதவும் என்று கார்னி கூறியுள்ளார். அந்த ஒப்பந்தத்தின் படி, 2030-ஆம் ஆண்டுக்குள் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களில் பாதி வாகனங்கள் $35,000-க்கு குறைவாக இருக்க வேண்டும்.

“இங்கு வர்த்தகம் தான் தேசிய பாதுகாப்பை விட முக்கியமாக பார்க்கப்பட்டுள்ளது,” என்று பிஸ்சன் கூறினார். குறிப்பாக, கனடாவின் பொருளாதாரத்தை அமெரிக்காவைச் சாராமல் மாற்ற முயலும் கார்னியின் முயற்சிகளில் இது தெளிவாக தெரிகிறது.

இந்த முடிவை எடுத்ததால், அமெரிக்காவையும் சேர்த்து நமது Five Eyes கூட்டணி நாடுகளில் (The Five Eyes (FVEY) is an intelligence alliance comprising Australia, Canada, New Zealand, the United Kingdom, and the United States.) சிலரிடமிருந்து நாம் தனிமைப்படுகிறோம். சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்கள் (EVs) தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தானவை என்று அந்த நாடுகளும் கூறியுள்ளன.

2024 ஜூன் மாதத்தில், சீனாவில் தயாரிக்கப்படும் மலிவான EV கார்கள் வட அமெரிக்க சந்தையை நிரப்பாமல் தடுப்பதற்காக, அமெரிக்கா விதித்த வரிகளைப் போலவே கனடாவும் வரி விதிக்க வேண்டுமா என்று ஒட்டாவா ஆலோசித்துக் கொண்டிருந்தது. அப்போது துணை பிரதமராக இருந்த கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட், இது வெறும் பொருளாதார பிரச்சனை அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

“சீனாவில் இருந்து வரும் உயர் தொழில்நுட்ப பொருட்கள், குறிப்பாக EV கார்கள் தொடர்பாக, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட தேசிய பாதுகாப்பு அம்சங்களையும் நாங்கள் கவனத்தில் எடுத்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

அதற்குப் பிறகு, கனடா சீனாவில் தயாரிக்கப்பட்ட அனைத்து மின்சார வாகனங்களுக்கும் 100 சதவீத வரி விதித்தது.

அதே ஆண்டின் செப்டம்பரில், அமெரிக்காவைப் போலவே கனடாவிலும் விற்கப்படும் வாகனங்களில் சீன ஆட்டோ மென்பொருள்களைத் தடை செய்வதை அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஃப்ரீலேண்ட் கூறினார். ஆனால் அந்தத் தடை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

அந்த நேரத்தில், நியூ பிரன்ஸ்விக்கில் உள்ள Beauceron Security என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தின் CEO டேவிட் ஷிப்லி,

இந்த EV களை “நகரும் உளவு வாகனங்கள்” என்று அழைத்தார். காரணம், அவற்றில் மைக்ரோஃபோன், கேமரா போன்ற பல தொழில்நுட்பங்கள் உள்ளன.

18 மாதங்கள் கழித்தும், அவரது கருத்து மாறவில்லை என்று அவர் Global News-க்கு தெரிவித்தார்.

“சீனா இதைப் செய்யும் நோக்கத்துடன் இருக்கிறது. அதற்கான திறனும் அவர்களிடம் உள்ளது. மேலும், சீன தேசிய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ், அந்நாட்டு நிறுவனங்கள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற சட்டமும் உள்ளது,” என்று அவர் கூறினார்.

இதே காரணங்களால்தான் TikTok போன்ற செயலிகள் குறித்தும் உளவு மற்றும் பாதுகாப்பு கவலைகள் எழுந்துள்ளன. அதனால் அமெரிக்காவில் அந்த செயலியைத் தடை செய்ய அல்லது அதன் அமெரிக்க பகுதியை சீன நிறுவனமான ByteDance-இலிருந்து பிரிக்க முயற்சிகள் நடக்கின்றன.

ஆனால் ஷிப்லி கூறுவது என்னவென்றால், இது சீன EV களுக்கே மட்டுமல்ல. இணையத்துடன் இணைக்கப்பட்ட எந்த வாகனமும், அது எங்கு தயாரிக்கப்பட்டிருந்தாலும், இதே பாதுகாப்பு குறைபாடுகளை கொண்டிருக்கிறது. சீன அரசு ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் அவற்றையும் பயன்படுத்த முடியும்.

“அவர்கள் உளவு பார்க்க விரும்பினால், தங்களது கார்கள் மட்டும் அல்ல — இணையத்துடன் இணைக்கப்பட்ட எல்லா கார்கள் மீதும் உளவு பார்க்க முடியும். அதற்கான அறிவும் திறனும் அவர்களிடம் உள்ளது,” என்றார்.

“அதனால் சீனாவில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை மட்டும் குறிவைப்பது குறுகிய பார்வை. டெஸ்லா  வகானங்கள் கூட உளவு பார்க்க முடியும் என்ற எண்ணம், பீஜிங் கேட்பதைப் போலவே எனக்கு அசௌகரியமாக இருக்கிறது,” என்றும் அவர் சொன்னார்.

2021-ஆம் ஆண்டு, சீன அரசே டெஸ்லா வாகனங்களை சில அரசு மற்றும் இராணுவ பகுதிகளுக்கு அருகில் செல்லத் தடை செய்தது. காரணம் – அதே உளவு கவலைகள்.

ஷிப்லி, இந்த பிரச்சனை குறித்து கனடா அரசின் உயர் அதிகாரிகளிடம் பலமுறை கூறியுள்ளதாகவும், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

“அரசு தினசரி ஏற்படும் மற்ற பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறது,” என்றார்.

“இது அரிதாக நடக்கும், ஆனால் நடந்தால் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் விஷயம். இத்தகைய விஷயங்களில் கனடா பொதுக் கொள்கை தோல்வியடைகிறது,” என்றும் அவர் விமர்சித்தார்.

இதற்கிடையில், கனடா பொது பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி, சீன EV கள் கனடியர்களை உளவு பார்க்கும் என்ற ஒன்டாரியோ முதல்வர் ஃபோர்டின் கவலைகளை அரசு பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறினார்.

“பாதுகாப்பு மற்றும் பொது பாதுகாப்பு பார்வையில் எங்களுக்கு கவலை இல்லை. கனடாவுக்குள் வரும் எந்த வாகனமும் கனடிய தரநிலைகளை பின்பற்ற வேண்டும்,” என்றார் அவர்.

ஆனால், ஃப்ரீலேண்ட் 2024-ல் கூறிய கருத்துகளிலிருந்து அரசின் நிலை எப்படி மாறியது என்பது குறித்து Global News எழுப்பிய கேள்விகளுக்கு அவரது அலுவலகம் பதிலளிக்கவில்லை.

நிதி அமைச்சர் ஃபிரான்சுவா-பிலிப் ஷாம்பேன், “சீனாவுடன் உறவுகளை வைத்துக்கொள்வது அவசியம், ஆனால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்” என்று கூறினார். வெளிநாட்டு முதலீடுகளுக்கு பாதுகாப்பு விதிமுறைகள் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

ஷிப்லி, இணையத்துடன் எப்போதும் இணைக்கப்பட்ட வாகனங்களுக்கு நுகர்வோர் உரிமைகள் சட்டம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார். அதில்:

  • பாதுகாப்பு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் மென்பொருள் புதுப்பிப்புகள் வழங்க வேண்டும்

  • புதிய சைபர் ஆபத்துகளுக்கான கட்டாய சோதனைகள்

  • அவசர நிலையில் வாகனத்தை இணையத்திலிருந்து துண்டித்தாலும் ஓட்ட முடியும் வசதி

எல்லாம் இருக்க வேண்டும் என்றார்.

“லாஸ் வேகாஸில் நடந்த ஒரு ஹேக்கில், கார் டீலர் நெட்வொர்க்கை ஹேக் செய்து, தனிப்பட்ட வாகனங்களின் இருப்பிடத்தை கண்டுபிடிக்க முடிந்தது. இது தனியுரிமை மட்டுமல்ல, பாதுகாப்பு ஆபத்தையும் உருவாக்குகிறது — குறிப்பாக குடும்ப வன்முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு,” என்றார்.

“10 ஆண்டுகளாகவே, இணையம் மூலம் வாகனங்களை கட்டுப்படுத்த முடியும் என்று நமக்கு தெரியும். உயிருக்கு ஆபத்தான நிலை கூட உருவாகலாம். ஆனாலும் நாம் எதுவும் செய்யவில்லை,” என்று அவர் முடித்தார்.

 

Share.
Leave A Reply