சில தமிழ் ஹீரோக்கள், தமிழ் மொழியை சேர்ந்தவர்களே கிடையாது. அவர்கள் யார் தெரியுமா? கேட்டா நீங்களே ஷாக் ஆயிருவீங்க..

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, இங்கு டாப் இடத்தில் இருக்கும் பெரும்பாலானோர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்தான் என்று பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மையில் அப்படி டாப் இடத்தில் இருக்கும் நடிகர்கள் பலர் தமிழ் நாட்டில் இருந்து வந்தவர்கள் கிடையாது என்பது யாருக்கும் தெரியாது. இந்த லிஸ்டில் ரஜினிகாந்த் முதல் ரஜினி முதல் அஜித் வரை பலர் இருக்கின்றனர்.

எம்.ஜி.ஆர்:

தமிழக மக்கள் தலைவனாக ஏற்றுக்கொண்ட ஒரு நபர், எம்.ஜி.ராமச்சந்திரன். நடிகராக இருந்து, தமிழ்நாட்டின் முதலமைச்சராக உயர்ந்த

இவர், மலையாள குடும்பத்தை சேர்ந்தவர் என்பது பலருக்கு தெரியாது. ஏழ்மையில் இருந்த இவர்களின் குடும்பம், எம்.ஜி.ஆர் சிறுவயதாக இருக்கும் போதே தமிழ்நாட்டிற்கு வந்தனர். எம்.ஜி.ஆருக்கு நடிப்பு மீது இருந்த ஈர்ப்பு, அவரை நடிகனாக்கியது. மக்கள் மீது இருந்த ஈர்ப்பு, அவரை தலைவனாக்கியது.

ரஜினிகாந்த்:

ரஜினிகாந்த், பெங்களூருவை சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அங்கு, சிவாஜி ராவ் என்கிற பெயருடன் நடத்துனராக இருந்த இவரது தாய் மொழி, மராத்தி ஆகும்.

சினிமா ஆசை இவரை விடாமல் துரத்தியதால், சென்னைக்கு வந்து, தமிழ் மற்றும் திரைப்பட கலையை கற்று டாப் நடிகராக உயர்ந்தார். இவருக்கு, மராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகள் தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித் குமார்:

ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என அழைக்கப்பட்ட அஜித் குமார், தமிழ்நாட்டை சேர்ந்தவர் கிடையாது.

முன்னாள் ஆந்திரா, தற்போதைய தெலங்கானாவில் இருக்கும் செகந்தராபாத்தில் பிறந்தவர் அஜித்.

இவரது தந்தை சுப்ரமணியம், கேரளாவில் உள்ள பாலக்காடை சேர்ந்தவர். ஆனால் தமிழ்நாட்டில் வாழ்ந்து வந்தார். இவரது தாய் மோகினி, கொல்கட்டாவில் உள்ள சிந்தி குடும்பத்தை சேர்ந்தவர். அஜித் மற்றும் அவரது குடும்பத்தினர், சென்னையில்தான் பெரும்பாலும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவன்:

தமிழ் சினிமாவில், சார்மிங் ஆன நடிகர் என்கிற பெயரை எடுத்தவர், மாதவன். இவர் தமிழராக இருந்தாலும் வட இந்தியாவின் ஜார்காண்டில்தான் வளர்ந்தார்.

இவருக்கு முதன் முதலில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் இந்தி சீரியல்களில்தான். அங்கு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

இதையாெட்டி, தமிழில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கிய மின்னலே மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே, ஆயுத எழுத்து உள்ளிட்ட படங்கள் மூலம் பிற படங்களுக்கான வாய்ப்பு கிடைத்தது. இதற்கிடையில் இவர் இந்தியிலும் நடிக்க ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால்:

நடிகர் விஷால், சென்னையில் பிறந்து வளர்ந்தவர்தான். இருப்பினும், இவரது குடும்பத்தினர் ஆந்திராவின் நெல்லூர் பகுதியை சேர்ந்தவர்கள். தயாரிப்பாளரும் தொழிலதிபருமான ஜி.கே.ரெட்டியின் மகனான இவர், தமிழின் முக்கிய நடிகர்களுள் ஒருவராக இருக்கிறார்.

ஆர்யா:

தமிழ் திரையுலகில், ஜாலியான நடிகர்களுள் ஒருவராக இருப்பவர், ஆர்யா. இவர், கேரளாவில் உள்ள கேசர்காட் பகுதியை சேர்ந்தவர்.

இவரது தந்தை, தென்னிந்தியாவின் பெரிய தயாரிப்பாளர்களுள் ஒருவர். இவர் பிறந்தது கேரளாவாக இருப்பினும், வளர்ந்தது எல்லாம் தமிழ்நாட்டில்தான்.

பள்ளி கல்லூரி படிப்பு அனைத்தையும் இங்கேதான் முடித்தார். இதையடுத்து அவருக்கு உள்ளம் கேட்குமே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த பின்பு, அதை பயன்படுத்திக்கொண்டு இப்போது முக்கிய நடிகராக இருக்கிறார்.

பிற நடிகர்கள்:

மேற் கூறியவர்களை தாண்டி, நடிகர்கள் அர்ஜுன, பிரகாஷ் ராஜ், மைக் மோகன், ஃபகத் ஃபாசில், துல்கர் சல்மான், பிருத்விராஜ், பிரபு தேவா, ஸ்ரீகாந்த், வினய், ஆதி, நரேன், அபாஸ் உள்ளிட்ட பலர் வெவ்வேறு தமிழ் நடிகர்கள், தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply