-படுகாயமடைந்தவர் வைத்தியசாலையில்
மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததுடன், ஒருவர் படுகாயமடைந்தார். இவ்விளைஞர்கள் மூவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், எதிரேவந்த சிறிய லொறி ரக வாகனத்துடன் மோதி கடந்த (23) வெள்ளிக்கிழமை இவ்விபத்து நிகழ்ந்தது.இச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களில் இருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்.
ஏறாவூர் கலைமகள் பாடசாலை வீதியைச் சேர்ந்த 18 வயதுடைய எம். அஸ்மத் சஹி மற்றும் ஏறாவூர் தைக்கா வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய எஸ். ஆக்மல் ஆகியோரே உயிரிழந்தவர்களாவர்.இவர்களது தலையில் பலத்த காயங்கள் காணப்பட்டன.விபத்தடன் சம்பந்தப்பட்ட வாகனத்தின் சாரதியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணை அதிகாரி எம்எஸ். நசிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆரம்ப கட்ட விசாரணைகளை மேற்கொண்டார்.ஏறாவூர்ப் பொலிஸாரும் சாட்சியங்களைப் பதிவு செய்தனர்.

