வளைகுடாப் பகுதியில் அமெரிக்கா தனது படைகளைத் திரட்டி வரும் நிலையில், ராணுவ நடவடிக்கையைத் தவிர்க்க, இரான் “இரண்டு விஷயங்களை” செய்ய வேண்டும் என்று தான் கூறியுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
“முதலாவதாக, அணு ஆயுதங்கள் கூடாது. இரண்டாவதாக, போராட்டக்காரர்களைக் கொல்வதை நிறுத்த வேண்டும்,” என்று அமெரிக்க அதிபர் கூறினார். மேலும், “அவர்கள்(இரான்) ஆயிரக்கணக்கானோரைக் கொல்கிறார்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப் தனது மனைவி மெலனியாவைப் பற்றிய ஒரு ஆவணப்படத்தின் வெளியீட்டு விழாவில் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
“தற்போது எங்களுடைய பல பெரிய, மிகவும் சக்திவாய்ந்த கப்பல்கள் இரானை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. அவற்றை நாங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாமல் இருந்தால் அது சிறப்பாக இருக்கும்.” என அப்போது டிரம்ப் பேசினார்.
இரானின் அணுசக்தித் திட்டம் குறித்து ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பல வாரங்களாக அந்நாட்டின் மீது அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில்,டிரம்பின் சமீபத்திய கருத்துக்கள் வெளிவந்துள்ளன.
“டிரிக்கரை அழுத்த தயாராக” இருப்பதாக இரான் அறிவிப்பு
முன்னதாக டிரம்பின் எச்சரிக்கைக்கு பதிலளித்திருந்த இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, எந்தவொரு ஆக்கிரமிப்புக்கும் “உடனடியாகவும் சக்திவாய்ந்த முறையிலும் பதிலடி கொடுக்க” ஆயுதப் படைகள் “விசையில் விரல்களை வைத்தபடி” தயாராக இருப்பதாக கூறியிருந்தார்.
ராணுவ நடவடிக்கைகளைத் தவிர்க்க இரான் இரண்டு விஷயங்களை செய்ய வேண்டுமென்று அந்நாட்டிடம் கூறியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ராணுவ இருப்பை அதிகரித்து வரும் சூழலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“அணு ஆயுதங்கள் கூடாது, போராட்டக்காரர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்” என்று கூறிய அவர், “இரானில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதாக” குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்துள்ள இரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி, நாட்டின் ஆயுதப் படைகள் முழுமையாகத் தயார்நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், எந்தவொரு தாக்குதல் நடந்தாலும், இரான் “உடனடியாக முழு பலத்துடன்” பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும், படைகள் “டிரிக்கரை அழுத்த தயாராக” இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

