பிரபல நடிகை சினேகா, 44 வயதிலும் ஃபிட் ஆக இருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா?

மக்கள் மத்தியில் முக்கிய நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவரை புன்னகையரசி என்றும் கூறுவர். இவர், 40 வயதை கடந்தும் ஃபிட் ஆக இருக்கிறார். இதற்கு காரணம் என்ன தெரியுமா? அவர் சாப்பிடும், இந்த பொருள்தான். அது என்ன தெரியுமா?

திரையுலகில், 40 வயதை கடந்த நாயகிகள் ஒரு சிலரே இருக்கின்றனர். அப்படி இருக்கும் ஒரு சில நாயகிகளுள் ஒருவர் சினேகா. ஒரு காலத்தில் ஹீரோயினாக நடித்து வந்த இவர், இப்போது துணை மற்றும் குணச்சித்திர பாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சினேகா, ஒரு நேர்காணலில் தன் உடல் எடை கூடாமல் இருப்பதற்கான சீக்ரெட் குறித்து பகிர்ந்திருக்கிறார். அது என்ன தெரியுமா?

சினேகாவின் டயட், மிகவும் சுத்தமானதாம். எப்போது, ஒரு நாளைக்கு உடல் எடை ஏறாமல் இருக்க கலோரிகளை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை கணக்கிட்டு எடுத்து கொள்கிறாராம். கூடவே, உணவு கட்டுப்பாட்டிலும் இருக்கிறாராம்.

உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டுஎன நினைப்பவர்கள், தங்களது உணவில் இருந்து சர்க்கரையை கட் செய்வது வழக்கம். அப்படி சினேகாவும் செய்திருக்கிறார். மாதத்தில் ஒரு நாள் மட்டுமே சுகர் எடுத்துக்கொள்வாராம்.

மினரல்ஸ், கார்ப்ஸ், ஃபைபர் மற்றும்புரதம் உள்ளிட்ட சத்து நிறைந்த உணவுகளையே சினேகா எடுத்துக்கொள்கிறாராம். அதோடு தனது உணவில் மசாலா மற்றும் உப்பை குறைத்துள்ளார்.

உடலில் நீர்ச்சத்து இருக்க வேண்டியது ரொம்பவும் முக்கியம் ஆகும். எனவெ, எப்போதும் அதிக தண்ணீர் குடித்து உடலில் நீர்ச்சத்துடன் இருப்பாராம்.

சர்க்கரை குறைப்பு குறித்து பேசும் மருத்துவர்கள், கலோரியில் இருந்து 200-500 வரை குறைக்கலாம் என்கின்றனர்.

இதனால், வாரத்திற்கு சில கிராம்கள் முதல் 1 கிலோ வரை குறையலாம்.

(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் சினேகாவின் ஃபிட்னஸ் தொடர்பான அனுபவங்கள் ஆகும்.

இவர் தகுந்த நிபுணர் இல்லை என்பதால் இவரின் அறிவுரைகள் நேரடியாக பின்பற்ற வேண்டாம். பின்பற்றும் முன்னர் மருத்துவ நிபுணர்களிடம் உரிய ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

Share.
Leave A Reply