உத்திர பிரதேசம், கசிதாபாத்தில், மூன்று சகோதரிகள் ஒன்றாக உயிரை மாய்த்துக்காெண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் காசியாபாத்தில், மூன்று சகோதரிகள், ஒன்றாக மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உயிரை மாய்த்துக் கொண்ட மூன்று சகோதரிகள்!

காசியாபாத்தில் பகுதியில் இருக்கும், ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்பதாவது மாடியில் இருந்து மூன்று சகோதரிகள் ஒன்றாக கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

நிஷிகா என்கிற 16 வயது சிறுமி, Prachi என்கிற 14 வயது சிறுமி, மற்றும் Pakhi என்கிற 12 வயது சிறுமிகள் தான் இப்படி ஒரு முடிவை எடுத்து இருக்கின்றனர்.

இவர்கள் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக இரு தினங்களுக்கு முன்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதை எடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார்.  இந்த மூன்று சிறுமிகளும் தரையில் ரத்த வெள்ளத்தில். உடனடியாக அவர்களை அவசர ஊர்தியில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அங்கு இவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களின் தந்தை, வெளிநாட்டு கரன்சி வியாபாரியாக இருக்கிறார்.

ஆன்லைன் கேம் காரணமா?

இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரம் வரை இந்த மூன்று சிறுமிகளுமே உயிரிழந்ததற்கு காரணம் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையானதுதான் என்று தெரிவிக்கப்பட்டது.

அதாவது கொரோனா காலத்தில் செல்போன் மூலம் ஆன்லைன் வகுப்புகளில் இவர்கள் பாடம் கற்றபோது ஆன்லைன் விளையாட்டையும் கற்றுக் கொண்டார்களாம். நாளடைவில் இவர்கள் இந்த ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி இருக்கின்றனர்.

இதனால் தங்களின் பெயர்களையும் Maria, Aliza, Cindy என குறிய மொழியில் மாற்றி இருக்கின்றனர். இவர்கள் இருக்கும் போது, “சாரி அப்பா, குறியாதான் எங்கள் வாழ்க்கை.

அதை எங்களால் கைவிட முடியாது”இன்று எழுதி வைத்துவிட்டு தங்கள் வீட்டில் இருந்த ஜன்னல் வழியாக ஒரு நாற்காலியை வைத்து ஏறி ஒருவர் பின் ஒருவராக கீழே குதித்து தற்கொலை செய்துள்ளனர்.

விசாரணையில் இவர்கள், ‘கொரியன் லவ் கேம்’ என்கிற ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன் இலக்கு, கடைசியில் தற்கொலை சவாலில் முடியும் என்று தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் 8 பக்க கடிதம் கிடைத்த பின்பு இந்த சம்பவத்தின் கோணம் சற்று மாறியுள்ளது.

கையில் கிடைத்த டைரி!

இறந்த சிறுமிகளின் தந்தை சேதன் குமாருக்கு, சுமார் ரூ.2 கோடி அளவிற்கு கடன் இருப்பது தெரிய வந்துள்ளது.

அன்றாட செலவுக்கே பணம் இல்லாமல் அவர் இருந்ததாகவும், சிருமிகளின் போன்களை பிடுங்கி, அதனை விற்று மின் கட்டணம் செலுத்தியதாக கூறப்படுகிறது.

இதோடு, மொபைலில் மூழ்கி இருந்தால், மூவருக்கும் திருமணம் செய்து கொடுத்து விடுவேன் என மிரட்டியதாக தெரிகிறது. வீட்டு கஷ்டம் காரணமாக இந்த மூன்று சிறுமிகளையும் அவர் பள்ளிக்கும் அனுப்பவில்லை.

மொபைல் போன்கள் பிடுங்கப்பட்டதால் மூன்று சிறுமிகளும் அதிருப்தியில் இருந்துள்ளனர். “நாங்கள் இந்தியர்கள் கிடையாதுகொரியன் தான் எங்கள் வாழ்க்கை. எங்கள் வாழ்க்கையை விட்டு போகும் படி சொல்ல, உங்களுக்கு எப்படி துணிச்சல் வந்தது?

கொரியாவை நாங்கள் எவ்வளவு நேசித்தோம் என உங்களுக்கு ஹெரியாது. கொரியாவும், கொரிய பாப் இசையும்தான் எங்கள் வாழ்க்கை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

திருமணம் பற்றி பேசியது எங்களை பதற வைத்தது. எங்களுக்கு கொரியன் தான் பிடிக்கும், அவர்களைதான் நேசிக்கிறோம்.

இந்தியரை திருமணம் செய்து கொண்டு வாழ்வதா? அதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை” என்று அந்த 8 பக்க கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாக தெரிகிறது.

Share.
Leave A Reply