நடிகர் தனுஷ் மற்றும் மிருணால் தாக்கூர் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்படும் நிலையில், மும்பையில் நடந்த சினிமா விழாவில் “நீங்கள் வேறொருவரின் மணமகள்” என நடிகர் சித்தாந்த் சதுர்வேதி கிண்டல் செய்தது வைரலாகி வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக் என்றால் அது நடிகர் தனுஷ் மற்றும் மிருணால் தாக்கூர் இடையேயான காதல் கிசுகிசு தான்.

சினிமா உலகில் எப்போதுமே காதல் வதந்திகளுக்குப் பஞ்சம் இருக்காது. அந்த வகையில், கடந்த சில மாதங்களாகவே சமூக வலைதளங்களில் ஹாட் டாப்பிக் என்றால் அது நடிகர் தனுஷ் மற்றும் மிருணால் தாக்கூர் இடையேயான காதல் கிசுகிசு தான். இது ஒருபுறம் அனல் பறந்து கொண்டிருக்க, சமீபத்தில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு நிகழ்சியில் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

சென்னையும்… அந்த ‘ஸ்பெஷல்’ கேள்வியும்

மிருணால் தாக்கூர் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி நடித்துள்ள ‘தோ தீவானே செகர் மேன்’ (Do Deewane Seher Mein) படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடைபெற்றது.

அப்போது மேடையில் பேசிய தொகுப்பாளர், “சென்னைக்காரர்கள் உங்களிடம் சில கேள்விகளைக் கேட்கத் துடிக்கிறார்களே?” என்று மிருணாலைப் பார்த்துக் கேட்டார், மொத்த அரங்கமும் அவர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று கேட்க அமைதியானது.

உடனே சுதாரித்துக் கொண்ட சித்தாந்த் சதுர்வேதி, “அந்தச் சென்னைக் கேள்வி அவரிடமா (மிருணால்) அல்லது என்னிடமா?” எனக் கிண்டலாகக் கேட்க, மிருணால் முகம் சட்டென சிவந்தது. “இல்லை.. இல்லை.. அது உங்களிடம் தான்” என மிருணால் பதற, அந்த ‘சென்னைக்காரர்’ யார் என்று அங்கிருந்தவர்களுக்குப் புரிந்துவிட்டது.

“நீங்கள் வேறொருவரின் மணமகள்”

அதோடு நிற்காமல், மற்றொரு தருணத்தில் சித்தாந்த், “நீங்கள் ஏற்கனவே வேறொருவரின் மணமகள் ஆகிவிட்டீர்கள்” (Aap kisi aur ki dulhan hai) என்று மிருணாலைக் கேலி செய்ய, மிருணால் தர்மசங்கடத்தில் சிரித்துக்கொண்டே மழுப்பினார். தனுஷுக்கும் மிருணாலுக்கும் விரைவில் திருமணம் எனப் பரவி வரும் வதந்திகளுக்கு இது மேலும் தீனி போடுவது போல் அமைந்தது.

வதந்திக்கு வலு சேர்க்கும் அந்த ‘இன்ஸ்டா’ பாலோ

தனுஷும் மிருணாலும் கடந்த ஆண்டு பல இடங்களில் ஒன்றாக வலம் வந்ததில் இருந்தே இந்த வதந்தி தொடங்கிவிட்டது.

சமீபத்தில், தனுஷின் சகோதரிகளை மிருணால் இன்ஸ்டாகிராமில் பின்தொடரத் தொடங்கியது, “புகுந்த வீட்டு உறவுகளுடன் இப்போதே பந்தம் தொடங்கிவிட்டதோ?” என ரசிகர்களைப் பேச வைத்தது.

தென்னிந்தியப் படங்களில் மிருணால் அதிக கவனம் செலுத்தி வருவதும், தனுஷுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கமுமே இதற்குக் காரணம் என பாலிவுட் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.

எனினும், “நாங்கள் நண்பர்கள் தான்” என்று கூடச் சொல்லாமல் இருவரும் மௌனம் காப்பது தான் தனுஷ் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திரையில் ஒரு எதார்த்த காதல்

ஒரு பக்கம் நிஜ வாழ்க்கையில் காதல் வதந்திகள் ஓடிக்கொண்டிருக்க, மறுபுறம் பிப்ரவரி 20-ம் தேதி வெளியாகவுள்ள ‘தோ தீவானே செகர் மேன்’ படத்தில் சித்தாந்த் – மிருணால் இடையேயான எதார்த்தமான காதலைப் பார்க்க ரசிகர்கள் ஆவலோடு உள்ளனர்.

சஞ்சய் லீலா பன்சாலி தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படம், காதலை ஒரு தேவதைக் கதையாகச் சொல்லாமல், வலிகள் மற்றும் நேர்மையுடன் கூடிய பயணமாகச் சொல்ல வருகிறதாம்.

Share.
Leave A Reply