நீண்ட இழுபறிக்குப் பின்னர் மீண்டும் மாகாண சபை தேர்தல் ஒன்று நடத்தப்படுமா என்ற எதிர் பார்ப்பு எழுந்திருக்கிறது.

மாகாணசபை தேர்தலை நடத்துவதில் அரசு மெத்தனப் போக்கை காட்டிவருகின்றது என்ற குற்றச்சாட்டு ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டாக எழுந்திருக்கின்றமை அரசுக்கு அழுத்தத்தை கொடுத்தாலும் எல்லை நிர்ணயம் என்ற விடயத்தின் ஊடாக மாகாணசபை தேர்தலை பின்னகர்த்தும்,

அதே வேளை நடத்த வேண்டிய நிர்ப் பந்தம் வந்தால் அதை எதிர்கொள் வதற்கான முன்னேற்பாட்டோடு சாதுரியமாக தேசிய மக்கள் சக்தி காய்நகர்த்திவருவதை அரசாங்கத்தின் செயற்பாடுகள் ஊடாக தெளிவாகத் தென்படுகின்றது.

மாகாண சபைத் தேர்தல்கள் சட் டத்தின் பிரகாரம் மாகாண சபையொன்றின் பதவிக்காலம் நிறைவடைந்து, அந்த மாகாண சபை கலைந்த நாளிலிருந்து, நான்கு வார காலத்துக்குள், குறித்த மாகாண சபைத் தேர் தலை நடத்துவதற்கான அறிவித்தலை, தேர்தல் ஆணைக்குழு விடுக்க வேண்டும்.

ஆனால், மாகாண சபைகள் கலைந்து, பல ஆண்டுகள் கடந்தும் இன்னமும் மாகாணச பை தேர்தல்கள் இடம்பெறாததுக்கு காரணம் 2017ஆம் ஆண் டின் 17ஆம் இலக்க மாகாண சபைத் தேர்தல் (திருத்தச்) சட் டத்தை நிறைவேற்றியமையே.

13 ஆம் திருத்தத்தினூடாக அறிமுகப்படுத்தப்பட்ட மாகாண சபைகளுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் விகிதா சாரப் பிரதிநிதித்துவ முறைமை 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, திருத்தச் சட்டத்தின் மூலம் முற்றிலும் மாற்றியமைக் கப்பட்டு உள்ளூராட்சி மன்றங்களுக்கான புதிய தேர்தல் முறைக்கு ஒத்த வகையிலான ‘கலப்புமுறை‘ அல்லது ‘கலப்பு உறுப்பினர் விகிதாசாரப் பிரதிநி தித்துவ முறை’ அறிமுகப்படுத் தப்பட்டமையே.

இது தொகுதி முறை, விகிதா சார முறை ஆகிய இரண்டையும் கொண்ட கலப்பு முறையாகும்.

விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் கீழ், மாவட்ட ரீதியா கக் கட்சிக்கான வாக்கு, விருப்பு வாக்கு என்ற இரண்டு அடிப்படைகளில் உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.

ஆனால், தொகு திமுறை என்று வரும் போது, ஒவ்வொரு தொகுதிக்குமான உறுப்பினர் தெரிவு செய்யப்பட வேண்டிய நிர்ப்பந்தம் உள்ள நிலையில், தொகுதி எல்லை நிர் ணயம் செய்ய வேண்டிய அவசி யம் எழுகின்றது.

இதற்கமைய 2017 ஆம் ஆண் டின் 17 ஆம் இலக்கத் திருத்தச் சட்டத்தின் கீழ், மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், தொகுதி எல்லை நிர்ணயமானது முதலில் செய்யப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில், தொகுதி நிர்ணய குழு நியமிக்கப்பட்டுத் தொகுதிகளை நிர்ணயம் செய்து,நாடாளுமன்றத்தில் அந்தத் தொகுதி நிர்ணயமானது, மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என 2017 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்கத் திருத்தச் சட்டம் வலியுறுத்து கின்றது.

இவ்வாறான நிலையில் கடந்த ஆட்சியாளர்களால் ‘எல்லை நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப் பிக்கப்பட்டாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற முடியாத நிலை காணப்பட்டது.

”எல்லை நிர்ணய அறிக்கை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டாலும், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெறமுடியாத நிலை காணப்பட்டது.”

 

இதன்காரணமாக மாகாண சபைத் தேர்தலும் காலவரையின்றி இழுபறி தொடர்கிறது. எல்லை மீளாய்வு இப்போ தைக்கு சாத்தியமில்லை என்ற நிலையில் பழைய தேர்தல் முறையில் மாகாண சபைத் தேர் தலை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்றது.

இவ்வாறாக நிலையில் மீண்டும் மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்படுவதற்கான சாத்தியங்களும் பின்தள்ளிப் போவதற்கான வாய்ப்பும் சம அளவில் காணப் படும் நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபை தேர் தலை நடத்த வேண்டிய அழுத் தங்கள் அதிகரித்துவருகின்றதாக தெரிகின்றது.

இவ்வாறான நிலையில் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை யில் மாகாண சபைத் தேர்தலை எதிர்கொள்வதற்கான பலமான நிலையில் தமிழ்க் கட்சிகள் இருக் கின்றனவா என்ற கேள்வி எழுந்தி ருக்கின்றது.

உள்ளூராட்சி தேர்தலை பொறுத்தவரையில் தமிழ்த் தேசி யக் கட்சிகள் தமக்குள் முரண் பட்டு பிரிந்து போயிருக்கும் நிலை மக்கள் மத்தியில் தமிழ் தலைமைகள் மீதான நம்பிக்கையீனத்தை அதிகரித்திருக்கிறது.

ஏற்கனவே பாராளுமன்றத்தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு படிப்பினையாக அமைந்திருக்கும் நிலையில் மீண்டும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒன்றிணைவே மாகாண சபையை தக்கவைக்கும் என்பதோடு தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற் படுத்தும் என்ற சுடலை ஞானம் தமிழ் தலைமைகளுக்கு புரிய ஆரம்பித்திருப்பதாகவே தென்படுகிறது.

இதற்கான முயற்சிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பழைய பங்காளிகளுக்கிடையே பேச்சுக் கள் ஆரம்பித்திருப்பது வரவேற்பிற்குரியது.

இப் பேச்சுக்கள் தமிழ் மக்களின் தமிழ்த் தேசியக் கட்சி களின் ஒன்றிணைவான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் களத்தில் களம் காண்பதற்கான சாத்தியம் அதிகரித்திருந்தாலும் தொகுதிப் பங்கீடு, ஆசனப்பங் கீடு, முதலைமைச்சர் வேட்பாளர் போன்ற விடயங்களில் பங்காளிகளுக்கிடையில் முரண்பாடு எழாமல் சமாளிப்பதென்பது முயற்கொம்பே.

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பும் பேரம் பேசும் அர சியல் சக்தியாக தமிழ் தரப்பு பலமடையவேண்டும் என்பதே. இதுவே பௌத்த மயமாக்கல், சிங்களக் குடியேற்றம் எனப் பறிபோகும் வடக்கை பாதுகாப்ப தற்கு இருக்கும் வழி.

-நெடுந்தீவு ஜெயபாலன்-

Share.
Leave A Reply