17 வயதாக இருக்கும்போது இந்த நடிகை 48 வயதானவரை திருமணம் செய்துகொண்டார். அவர் செய்த தவறால் மொத்த வாழ்க்கையும் மாறியது.

சினிமா கலர்ஃபுல்லான உலகம் என்றாலும், அதில் நடிக்கும் சில கலைஞர்களின் வாழ்க்கை ப்ளாக் அன்ட் வொயிட்டாக இருப்பதையும் மறுக்க முடியாது. அதற்கு உதாரணம் இந்த நடிகையின் வாழ்க்கை.
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 17 வயதில் 48 வயதான நடிகரை திருமணம் செய்துகொண்டார். அவர் செய்த ஒரு தவறால் மொத்த வாழ்க்கையும் மாறியது. யார் இந்த நடிகை?

கடந்த 1979-ம் ஆண்டு மகேந்திரன் இயக்கத்தில் வெளியாகி க்ளாசிக் என கொண்டாடப்படும் ‘உதிரிப் பூக்கள்’ திரைப்படம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் பேபி அஞ்சு.
மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக, சில படங்களில் ஹீரோயினாக, பல படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்துள்ளார்.

ரஜினியின் ‘பொல்லாதவன்’, கமலின் ‘மீண்டும் கோகிலா’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’, ‘அழகிய கண்ணே’, ‘கேளடி கண்மணி’, ‘அரங்கேற்ற வேளை’ என பல படங்களில் நடித்தவர்.
தனுஷின் ‘பொல்லாதவன்’ வரை நடித்து கவனம் பெற்றார். இவர் நடிப்பில் கடைசியாக தமிழில் ‘மத யானைக் கூட்டம்’ திரைப்படம் வெளியானது. 100-க்கும் மேற்பட்ட படங்களிலும், `சித்தி’, `தீபம்’ உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

நடிகை அஞ்சு கன்னட நடிகர் டைகர் பிரபாகர் என்பவரை திருமணம் செய்துகொண்டார். கன்னடம், மலையாளம், தமிழ், இந்தி படங்களில் நடித்தவர் தான் டைகர் பிரபாகர். இவர் ரஜினியின் ‘முத்து’ படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நடிகை அஞ்சுவுக்கு 17 வயது இருக்கும்போது 48 வயதான டைகர் பிரபாகர் உடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு அவரது வாழ்க்கையில் பல எதிர்பாராத துயரங்கள் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக அஞ்சு அளித்த பேட்டி ஒன்றில், “எனக்கு அப்போது 17 வயது. அதை கல்யாணம் சொல்ல முடியாது.
அவருடன் ஒன்றரை வருடங்கள் இருந்தேன். குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 3 மாதத்தில் அவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது தெரிந்தது.
அதன் பிறகு பெரிய பிரச்சினை வெடித்தது. இனி நான் உங்கள் பேச்சை கேட்கமாட்டேன் என கூறிவிட்டேன். நான் அவருக்கு 4-வது மனைவி. அது எனக்கு தெரியவே தெரியாது.

அவர் வீட்டுக்கு போன பிறகு தான் அவருக்கு திருமணம் நடந்தது தெரிந்தது. என்னை விட வயதில் மூத்த 3 மகன்களுக்கு அவர் தந்தையாக இருந்தார்.
அப்போது ஒரு பையன் வீட்டுக்கு வந்து நான் தான் வினோத், டைகர் பிரபாகர் என் தந்தை என்று கூறினான். நான் ஷாக் ஆகிவிட்டேன். என் கணவரிடம் கேட்டதற்கு என் மகன் தான் என்றார்.
அவர்கள் என்னைவிட மூத்தவர்களாக இருந்தனர். அது எனக்கு மிகவும் அப்செட் ஆகிவிட்டது.

அப்போதே நான் அவரிடம் உங்களை வெறுத்துவிட்டேன். இனி பேசமாட்டேன் என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டேன்” என்றார். அதன் பிறகு ஓ.ஏ.கே சுந்தரை திருமணம் செய்துகொண்டார் நடிகை பேபி அஞ்சு. தற்போது சீரியல்களில் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

