– 1983ம் ஆண்டு யூலை 23 பிரபாகரன் தலைமையில் திருநெல்வேலியில் ராணுவ வாகனம் மீது தாக்குதல்!: 

-1983ம் ஆண்டு யூலை மாதம் 22ம் திகதி இரவு 9.30 மணியளவில் பலாலி ராணுவத் தலைமையகத்தில் தனது பணிகளை முடித்த பின்னர் யாழ்ப்பாண வீதியில் பயணித்தார்.

அவரது பயணம் திருநெல்வேலியைக் கடந்து செல்லும் வீதியாகும். அடுத்த நாள் இரவு அதே இடத்தில் ராணுவ வாகனம் தாக்கப்பட்டது.-13 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

……

ராணுவச்;; சிப்பாய் ஒருவரை அவரின்; பின்னாலிருந்து சுட்ட பின்னர் அவரின் துப்பாக்;;கியையும்; பறித்துச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து பிரபாகரனும் அவரது குழுவினரும் ஒரு பயங்கரவாத இயக்கம் தன்னை இறுக்கமான அமைப்பாக மாற்றிக் கொள்ளும் நிலைக்குச் சென்றனர்.

இதர தீவிரவாத இயக்கங்கள் தமக்கான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதைப் பயன்படுத்தி தாமும் அவ்வாறே தொடர்ந்தனர்.

இதன் காரணமாக பாதுகாப்பு படைகளுக்கு ஏற்கெனவேயிருந்த சிறிய சுதந்திரமும் இல்லாமல் போனது. பொது மக்களுடன் எவ்வித தொடர்புகளையும் மேற்கொள்ள முடியவில்லை.

ராணுவ வாகன தொடர் அணி பல்வேறு முன்னேற்பாடுகளுடன் மட்டுமே போக்குவரத்தை மேற்கொள்ள முடிந்தது.

பாதுகாப்பு சுற்றுலாவுக்குச் செல்வதானால் குறைந்த பட்சம் 2 வாகனங்கள் தேவைப்பட்டதுடன் 13 பேருக்குக் குறையாத ராணுவத்தினரும் கூடவே செல்ல வேண்டியிருந்தது.

இக் காலத்தில் கிழக்கு மாகாணம் பயங்கரவாத சம்பவங்கள் இல்லாத பகுதியாக அப்போது இருந்தது. ஆனாலும் விடுதலைப் புலிகள் அங்கும் படிப்படியாக ஊடுருவும் முயற்சிகளில் ஈடுபட்டனர்.

இவ் வேளையில் சரத் பொன்சேகா ராணுவத்தின் மேஜர் பதவியிலிருந்தார். ஆப்போது அவருக்கு வயது 32. அவர் சுமார் சுமார் 100 ராணுவத்தினர் அடங்கிய படையணிக்குத் தலைமை தாங்கினார்.

1983ம் ஆண்டு யூலை 22

1983ம் ஆண்டு யூலை மாதம் 22ம் திகதி இரவு 9.30 மணியளவில் பலாலி ராணுவத் தலைமையகத்தில் தனது பணிகளை முடித்த பின்னர் யாழ்ப்பாண வீதியில் பயணித்தார்.

அவரது பயணம் திருநெல்வேலியைக் கடந்து செல்லும் வீதியாகும். அடுத்த நாள் இரவு அதே இடத்தில் ராணுவ வாகனம் தாக்கப்பட்டது.

பிரபாகரன், செல்லக்கிளி

பிரபாகரன் தலைமையில் வந்த குழுவினர் சரமாரியாக சுட்டதில் ஒரு அதிகாரி உட்பட 13 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

இத் தாக்குதலுக்குப் பிரதான காரணம் பிரபாகரனின் இரண்டாவது தளபதியாகிய சீலன் என்பவர் சில வாரங்களுக்கு முன்னர் ராணுவத்துடன்; ஏற்பட்டட மோதலில் கொல்லப்பட்டிருந்தார்.

திருநெல்வேலிச் சம்பவம் விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தீவிரவாத ஆதிக்க எழுச்சியை உறுதிப்படுத்;தியது.

இதன் தாக்கம் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது. திருநெல்வேலிச் சம்பவம் அவ் வேளையில் மிக மோசமான தாக்குதலாக அமைந்திருந்தது.

தெற்கில் இச் செய்தி மிக மோசமான வன்முறையைக் கட்டவிழ்த்தது. சந்தர்ப்பவாத, சுயநலவாத அரசியல்வாதிகள் இத் தருணத்தை நன்கு பயன்படுத்தியதோடு, சிங்கள பௌத்த பெரும்பான்மையினரை தமது கருத்துக்களை ஏற்கும் நிலைக்குத் தள்ளினர்.

யூலை கலவரம்

சிங்களப் பகுதியிலிருந்த சமூக விரோத சக்திகள் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் தமிழ் சிவிலியன்களைத் தாக்கினர். வீடுகள் எரிக்கப்பட்டு, கடைகள் கொள்ளையிடப்பட்டு,

பல தமிழர்கள் கொல்லப்பட்டனர். சட்டம், ஒழுங்கு சீர் குலைந்தது. சில இடங்களில் சட்டம் ஒழுங்கு முற்றாகவே இல்லாமலிருந்தது.

அரசாங்கம் முப் படைகளுடன் பொலீசாரையும் பயன்படுத்தி நிலமையைக் கட்டுப்படுத்த நேரிட்டது.

இரண்டு வாரங்களுக்குள் நிலமை கட்டுப்பாட்டிற்குள் வந்த போதிலும், சமூகங்களுக்கிடையேயான நல்லிணக்கம், சர்வதேச மதிப்பு ஏற்கெனவே பாதிப்பிற்குள்ளாகியது.

அரசாங்கம் கிட்டத்தட்ட தனது கட்டுப்பாட்டை இழந்ததோடு, ஒரு மாறாத வடு ஒன்றினை ஏற்படுத்தியது. இந்த வடு மாறுவதற்கு பல ஆண்டுகள் எடுக்கலாம.

திருநெல்வேலிச் சம்பவம் தொடர்பாக எமக்குக் கிடைத்த உளவுத் தகவல்களைப் பின்னர் ஆராய்ந்த போது பிரபாகரன் சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பதாகவே அங்கு முகாமிட்டிருந்ததாகவும், இதனை அறியாத சரத் பொன்சேகாவின் படையினர் அந்த வீதியால் சென்றதாகவும். கூறப்படுகிறது.

இச் சம்பவத்தின் போது அந்த வீதி முற்றாகச் சேதமடைந்ததால் ராணுவத்தினர் நடந்து செல்ல பணிக்கப்பட்டனர். இதனால் மேலதிக தாக்குதல்களை பிரபாகரனால் நடத்த முடியவில்லை.

இத் தாக்குதல் இப் பிரச்சனையின் அடுத்த கட்டத்தை அடையாளப்படுத்தியது. பொது மக்களுக்கும், ராணுவத்திற்குமிடையேயான இடைவெளி அதிகரித்தது. நாடு ஆழுவதற்குமான பாதுகாப்பு, குறிப்பாக வடக்கு, கிழக்கு பகுதிகள் மிகவும் ஆபத்தான நிலையை நோக்கிச் சென்றது.

தெற்கில் வாழ்ந்த தமிழ் மக்கள் குறிப்பாக கொழும்பில் வாழ்ந்த பெருமளவிலான தமிழர்கள் இடம் பெயர்ந்தார்கள்.

பலர் வடக்கு, கிழக்கை நோக்கிச் செல்ல மேலும் பலர் இந்தியாவிற்கும், ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்றனர்.

இந்தியா – இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையேயான ராஜதந்திர உறவுகள் மிக மோசமான நிலையை எட்டின. அமைதியற்ற நிலை தொடர்ந்து காணப்பட்டதால் இரு நாடுகளுமே தமது நிலைப்பட்டை மறுபரிசீலனை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

இலங்கையிலிருந்து வெளியேறும் தமிழர்களை இந்தியா வரவேற்ற போதிலும் இம் மாதிரியான சிக்கலான நிலைக்கு இலங்கை அரசே காரணம் என்பதை இறுக்கமாகவே கூறியது.

பிரபாகரன் இன்னமும் 20 வயதிற்குள்ளேயே இருந்தமையால் இவற்றைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தினார்.

புலம்பெயர் தமிழர்களில் சிலரும், இந்திய அரசியல் சக்திகளில் சிலரும் அவரை ஆதரித்தமையால் அவர் தனது இருப்பிடத்தை தமிழ் நாட்டிற்கு மாற்றி இந்திய உளவுப் பிரிவின் உதவியுடன் பயிற்சி முகாம்களை நடத்தினார்.

அவரது குழுவினர் இன்னமும் ஆரம்ப நிலையிலிருந்த போதிலும் படிப்படியாக பலமான கெரில்லா பிரிவாக வளர்ந்தனர்.


இவ் வளர்ச்சி என்பது போரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றது. இப்போ இவர்கள் ஒரு சிறு ஆயுதம் தரித்த குழுவினர் அல்ல. வெளியில் செயற்படும் மிகவும் பண பலமுள்ள, அரசியல் தொடர்புகள் அதிகரித்த, தமது இலக்கை மிகவும் வரையறுத்த ஒரு ராணுவம் எனக் குறிப்பிடலாம்.

இலங்கை ராணுவத்தின் பலம்

1984ம் ஆண்டினை ஒரு கால எல்லையாகக் கொண்டால் சுமார் 15,000 ராணுவத்தினரைக் கொண்டிருந்தது.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் படிப்படியாக ராணுவத்தின் தொகையையும் அதிகரிக்க முடிவு செய்தனர்.

ஆனால் அவை வேகமாக நகரவில்லை. இருப்பினும் பலமான சக்தியாக வளர்ந்தது. இதனைப் பரீட்சிக்கும் வகையில் பலாலி ராணுவத்தினர் யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகளின் முகாமொன்றைத் தாக்கிஅ ங்கிருந்த 15 மூத்த உறுப்பினர்களை இல்லாமல் செய்தது.

இது திருநெல்வேலித் தாக்குதலுக்குப் பதிலடி கொடுப்பதாகவும், தம்மால் பதிலடி தர முடியும் என்பதாகவும் அமைந்தது.

கிழக்கில் நிலமைகள் ஓரளவு அமைதியாக இருந்த போதிலும், அங்கு விடுதலைப் புலிகளின் ஊடுருவல் தொடர்ந்து காணப்பட்டது.

இவ் வேளையில் மீதமாக செயற்பட்ட அமைப்புகள் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ள ராணுவச் சிப்பாய் மீதான தாக்குதல் அல்லது ராணுவத்திற்கு உணவு விநியோகம் செய்யும் வாகனங்கள் மீதான தாக்குதல்கள் என அவர்களும் தனித்தனியாக பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டனர்.

போராட்ட களத்திலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்கள் மிகவும் கவலை தரும் செய்திகளைத் தந்தன. அதாவது விடுதலைப் புலிகள் ஏ கே 47 ரக துப்பாக்கிகளையும், டாங்கிகளைத் தாக்கும் ஏவுகணைகளையும் ( Rocket Propelled Grenade )   ) பெற்றுள்ளதாக செய்திகள் கிடைத்தன.

(Armored Personel Carriers’ ‘)

இந் நிலையில் ராணுவத்தினர் தம்மை ஏற்றிச் செல்லும் விசேட வாகனங்களைக்  (Armored Personel Carriers’ ‘) கோரத் தொடங்கினர். அதாவது விடுதலைப் புலிகள் புதிய ராக ஆயுதங்களைப் பயன்படுத்தும் போது ராணுவமும் அதற்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ள வேண்டி ஏற்பட்டது எனலாம்.

இங்கு விடுதலைப் புலிகள் முதன் முதலாக தூர நின்று இயக்கும் கண்ணி வெடிகளைப் பயன்படுத்தினர். ஓவ்வொரு கண்ணி வெடியும் 20 முதல் 50 கிலோ அதி சக்திவாய்நத வெடி மருந்துகளைக் கொண்டிருக்கும். இவை பாரிய டாங்கிகளையும் தாக்கி அழிக்கும் சக்தி வாய்ந்தவை.

இத் தந்திரோபாய மாற்றங்கள் போரின முறைகளையும் மாற்றி அமைத்தன. பயங்கரவாதிகள் தெருக்களையும் கொலைக் களமாக மாற்றினர்.

ராணுவத்தின் போக்கு வரத்து என்பது மிகவும் சிக்கலாகியது. இதனால் முதலில் தெருக்கள் போக்குவரத்திற்கு உகந்த நிலையில் உள்ளனவா? ராணுவத்தினருக்கான எரி பொருட்கள், உணவு வண்டிகள் வர முடியுமா? என்பது போன்ற பிரச்சனைகள் மேலும் தொல்லை தருவதாக அமைந்தது.

இவை ஒரு சிறு தவறு நேரிடினும் பாரிய விளைவுகள் ஏற்படும் என்ற நிலையை அடைந்திருந்தன.

இதனால் ராணுவம் தனது பிரசன்னத்தை சகல இடங்களிலும் உறுதி செய்யும் நிலை ஏற்பட்டது. அடிக்கடி சுற்றி வழைப்புகள், முன்னேற்பாடகவே பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்தல் அதே வேளை உயர்ந்த தரத்தில் தமது செயற்பாடுகளை உறுதி செய்தல் என்பன கவனிக்க வேண்டியிருந்தன.

இதனால் ராணுவத்தினர் பல பயிற்சிகளையும் பெற்றனர்.

விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளம் படிப்படியாக விரிவாகியது. இந்தியாவில் தமது பாதுகாப்பை உறுதியாக்கினர்.

அதே வேளை யாழ்ப்பாணத்திலும் தமது தீர்மானங்களை மேற்கொள்ளும் வகையில் ஏற்பாடுகளைக் கொண்டிருந்தனர்.

1986 – 1987 ம் ஆண்டுகளில் நிலக் கண்ணி வெடி ஆபத்துகள் அதிகரித்த காரணத்தால் யாழ். நகரத்திற்குள் பிரவேசிப்பது பெருமளவில் தவிர்க்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தமக்கான பாதுகாப்பிடமாக அதனை மாற்றிக் கொண்டனர்.

புடிப்படியாகவே ராணுவத்தினரை பின்னே தள்ளிச் செல்ல நிரப்பந்தித்தார்கள். அதாவது யாழ். நுகரத்தின் கட்டுப்பாட்டை ராணுவத்தினர் இழந்தனர்.

இதனால் முதன் முதலாக மாகாணம் ஒன்றின் தலைநகரை தாமே கட்டுப்படுத்தினர். இதனால் அந்த நகரத்திற்கு அப்பால் அதாவது சுமார் 7 – 8 கிலோ மீற்றருக்கு அப்பால் செயற்பட நேரிட்டது.

இந்த நகரம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிற்குச் சென்றது ஒரு வகையில் அவர்களுக்கு உற்சாகம் அளிப்பினும், அரசிற்கு உளவியல் அடிப்படையில் பெரும் பாதிப்பாகும்.

இவ்வாறு பிரச்சனைகள் அதிகரித்துச் செல்கையில் கொழும்பு அரசியல் தலைமை அமைதியற்றுக் காணப்பட்டது.

சிவிலியன் அரசுக் கட்டமைப்பு ராணுவ கட்டளை அதிகரிகளுக்கு விடுதலைப் புலிகள் பெற்ற வெற்றிகளை விரைவாக மீட்டெடுக்குமாறு அழுத்தம் கொடுத்தனர்.

1987ம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் மேஜர் சரத் பொன்சேகா மேலதிக ராணுவ கற்கைக்காக பங்களாதேஷ் சென்றார். இக் கால இடைவெளியில் என்ன நடந்தது? அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

தொடரும்……….இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம் (“Army Commander’s Promise to the Nation – I Shall Not Leave This War Behind to the Next Army Commander”)‘ என்ற நூலின் தமிழ் மொழிச் சுருக்கம்

மொழிபெயர்ப்பு : வி. சிவலிங்கம்;

‘இந்தப் போரை அடுத்த இராணுவத் தளபதிக்கு நான் விட்டுச் செல்ல மாட்டேன்.’: இராணுவத் தளபதி சரத் பொன்சேகா நாட்டிற்கு வழங்கிய சத்தியம்’ !- (பகுதி-1) -வி. சிவலிங்கம்

 

Share.
Leave A Reply