“கர்நாடக மாநிலம் பெங்களூரு மைசூரு ரோடு பகுதியில் பிபிஏ பட்டதாரியான 23 வயது இளம்பெண் ஒருவர் தனது தாய் தந்தை மற்றும் இளைய சகோதரி உடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் 49 வயதுடைய அந்த தாய், தனது மூத்த மகள் மீது பெங்களூரு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் போலீசாரையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, வேலை தேடுவதற்காக கூறி, தனது தந்தையிடம் கேட்டு ஒரு ஸ்மார்ட்போனை அந்தப் பெண் வாங்கியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு முன்பு, மகள் ஒரு நபருடன் வீடியோ காலில் பேசிக்கொண்டிருப்பதை அவரது தாய் கவனித்துள்ளார்.

மகளின் மொபைல் போனை வாங்கிச் சோதித்தபோது குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.தனது தாய் தூங்கிக்கொண்டிருக்கும்போது அவரது அந்தரங்க உறுப்புகளைப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து, வருண் என்ற நபருக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியுள்ளது தெரியவந்தது.

மேலும், தனது தாயின் அக்கா (பெரியம்மா) குளித்துக்கொண்டிருந்தபோது அவருக்குத் தெரியாமல் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதே நபருக்கு அனுப்பியுள்ளார்.

மொபைல் சாட்களை ஆராய்ந்தபோது வருண் என்ற அந்த நபரே இது போன்ற புகைப்படங்களை அனுப்புமாறு அப்பெண்ணைத் தூண்டியது தெரியவந்தது.

குடும்பத்தினர் தடுத்தும் கேட்காத அந்தப் பெண், கடந்த வாரம் வருணைத் திருமணம் செய்துகொள்ளப் போவதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

இந்நிலையில் தனது மகள் குறித்தும், புகைப்படங்கள் குறித்தும் அச்சத்தில் இருந்த தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.வழக்குப் பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ள வருணையும், அப்பெண்ணையும் தீவிரமாக தேடி வருகின்றனர். “,

Share.
Leave A Reply