Valentine Day Re-Release movies: வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படும் நிலையில், தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆக இருக்கும் படங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
சமீப காலமாக ரீ ரிலீஸ் என்பது ஒரு ட்ரெண்டாக மாறி இருக்கிறது. அவர்கள் அப்போது வசூல் செய்ததைவிட ரீ ரிலீஸ் செய்து அதிக பணம் ஈட்டுகின்றனர்.
விஜய்யின் கில்ல், ரஜினிகாந்த்தின் படையப்பா, அஜித்தின் மங்காத்தா படங்கள் ரீ ரிலீஸ் ஆனது. இப்படங்கள் அனைத்தும் நல்ல வசூலை ஈட்டி அசத்தியது.
இந்த நிலையில், வரும் பிப்ரவரி 14ஆம் தேதி காதலரை தினத்தை முன்னிட்டு சில காதல் படங்கள் ரீ ரிலீஸ் ஆக உள்ளது. அது என்னென்ன படங்கள் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

காதலர் தினம்: நடிகர் குணால், நடிகை சோனாலி நடிப்பில் உருவாகி 1999ஆம் ஆண்டு வெளியான படம் காதலர் தினம். இப்படத்தில் இடம் பெற்ற தாண்டியா ஆட்டமும் ஆட பாடல் மிகப்பெரிய ஹிட்டாகும். இந்த நிலையில்,இப்படம் பிப்ரவரி 14ஆம் தேதி தியேட்டரில் ரீ ரிலீஸ் ஆகிறது.

மின்னலே: நடிகர் மாதவன், அபாஸ், நடிகை ரீமா சென் ஆகியோர் நடிப்பில் உருவாகி 2001ஆம் ஆண்டு வெளியான படம் மின்னலே. இப்படம் பிப்ரவரி 13ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகிறது.

மெளனம் பேசியதே: நடிகர் சூர்யா, நடிகை த்ரிஷா ஆகியோர் நடிப்பில் இயக்குநர் அமீர் இயக்கத்தில் உருவான மெளனம் பேசியதே படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. இப்படம் வரும் பிப்ரவரி 13ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகிறது.

