2001-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் அஜித், ஜோதிகா இணைந்து நடித்த பூவெல்லாம் உன் வாசம் படம் தான் சிவக்குமார் கடைசியாக நடித்த தமிழ் படமாகும்.

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடியாக வலம் வரும் சூர்யா – ஜோதிகா இருவரும் காதல் திருமணம் செய்துகொண்ட நிலையில், இதற்கு சூர்யாவின் அப்பா சிவக்குமார் ஒப்புக்கொள்ளவில்லை என்று தற்போதுவரை பல தகவல்கள் வெளியாகி வருகிறது.

ஆனால் இவர்களை சேர்த்து வந்த்தே இந்த பெண் தான் என்று நடிகர் சிவக்குமார் பிரபல நடிகை ஒருவரை கைகாட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிப்பில் உச்சம் தொட்ட நடிகர்களில் ஒருவர் தான் சிவக்குமார். எம்.ஜி.ஆர் சிவாஜியுடன் நடித்த ஒரு சில நடிகர்களே தற்போது இருக்கிறார்கள்.

அதில் முக்கியமானவராக இருக்கும் சிவக்குமார், அடிப்படையில் ஒரு ஓவியர், பல அரசியல் தலைவர்களில் ஓவியங்களை வரைந்துள்ள இவர், எம்.ஜி.ஆர், சிவாஜி, உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்துள்ளார். சோலோ ஹீரோவாகவும் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

1965-ம் ஆண்டு வெளியாக காக்கும் கரங்கள் என்ற படத்தில் தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய சிவக்குமார், கடைசியாக 1993-ம் ஆண்டு வெளியான பொறந்த வீடா புகுந்த வீடா என்ற படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார்.

2001-ம் ஆண்டு எழில் இயக்கத்தில் அஜித், ஜோதிகா இணைந்து நடித்த பூவெல்லாம் உன் வாசம் படம் தான் சிவக்குமார் கடைசியாக நடித்த தமிழ் படமாகும். சின்னத்திரையில், 2005-ம் ஆண்டு, அண்ணாமலை என்ற சீரியலில் நடித்திருந்தார்.

தற்போது ஓவியம் வரைவது, பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் சிவக்குமார், கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில் தனது மகன் சூர்யா ஜோதிகாவை காதல் திருமணம் செய்துகொண்டதற்கு காரணம் யார் என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற ராதிகா, உயிரிலே கலந்தது படத்தில் நடிக்கும்போது சூர்யா, அமைதியாக உட்கார்ந்திருப்பார்.

நான் தான் இப்படியெல்லாம் உட்கார்ந்திருக்க கூடாது. தைரியாமாக இருக்க வேண்டும் என்று சொல்வேன். மறுபுறம் ஜோதிகாவும் அமைதியாக இருப்பார். சூர்யாவிடம் சொல்லி அவரிடம் பேச சொல்வேன் என்று கூறியுள்ளார்.

இதை அருகில் இருந்து கேட்ட சிவக்குமார், அவர்கள் இருவரையும் சேர்த்து வைத்த அயோக்கி பெண்ணே இவதான் என்று சொல்லி, நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் சுஹாசினி முதல் அனைவரும் சிரிக்கின்றனர்.

சூர்யா சிவனேனு இருந்திருப்பான். போய் பேசு பேசு என்று சொல்லி, இப்போ அவன் கல்யாணம் பண்ணி ரெண்டு குழந்தை பெத்துட்டான். சூர்யா 25 படங்களுக்கு மேல் பண்ணிட்டான். ஒரு படத்தில் கூட கதாநாயகி மேல் படுக்கிற மாதிரியான காட்சிகள் இருக்காது. அந்த அயோக்கியத்தனத்தை நான் தான் பண்ணியிருக்கேன்.

Share.
Leave A Reply