அல்லைப்பிட்டியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் சுட்டுப் படுகொவை செய்யப்பட்ட சிறுவனின் இறுதிக் கிரியைகள் இன்று (12) வட்டுக்கோட்டை – சித்தங்கேணியில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது.
அதன்பின்னர் பதாகைகளை தாங்கியவாறு சடலத்துடன் வந்த உறவுகள் வீதியில் இருந்து “பொலிஸாரை கைது செய், எமது பிள்ளைக்கு நீதி வேண்டும், பொலிஸாரின் அராஜகம் தொடர்கிறது” என கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிறுவனை இழந்த தாயின் வேதனையைப் பார்க்கும் போது தாங்க முடியவில்லை…
தன் 5 சகோதரங்கள் படிக்க வேண்டும் என்பதற்காக, தன் வாழ்வையே பணயம் வைத்து உழைக்கச் சென்ற ஒரு மூத்த மகனை, ஈவிரக்கமின்றிக் கொன்ற அந்தச் சிறிலங்கா காவல்துறையினர் காவலாளிகளா?
அல்லது தமிழ் மக்களின் உயிரைக் குடிக்கும் எமன்களா?
தன் குடும்பத்தின் ஒளிவிளக்காக இருந்த வாரிசை இழந்த இந்தத் தாயின் அழுகுரல் மனதை ரணமாக்குகிறது.
சமூக வலைத்தளங்களில் அந்தச் சிறுவனுக்கு நடந்தது சரி என வாதிடுபவர்கள் உண்மையிலேயே மனித மிருகங்கள்! அந்த வலி உங்களுக்கு வந்தால் தான் அதன் வேதனையை உணர முடியும்.

