நான் காதலில் விழும்போது, அதை முழு உலகிற்கும் பெருமையுடன் அறிவிப்பேன். அந்தத் தருணத்திற்காக நானும் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

தனுஷ் – மிருணாள் தாக்கூர் இடையே காதல் இருப்பதாகவும், இவர்கள் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக வதந்திகள் பரவிய நிலையில், இந்த வதந்திக்கு அவர் அளித்துள்ள பதில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

கடந்த சில மாதங்களாக நடிகை மிருணால் தாக்கூர் மற்றும் நடிகர் தனுஷ் ஆகியோருக்கு பிப்ரவரி 14-ம் தேதி திருமணம் நடைபெறப் போவதாகத் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன.

தற்போது தனது புதிய படமான ‘தோ தீவானே ஷெஹர் மேன்’ (Do Deewane Seher Mein) பட விளம்பரப் பணிகளில் பிஸியாக இருக்கும் மிருணால், இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

திருமண வதந்திகள் குறித்து பேசிய மிருணால், இதை நகைச்சுவையுடன் அணுகினார். “எனக்கே தெரியாமல் எனக்குத் திருமணம் நடப்பதாகச் செய்திகள் வருகின்றன.

பிப்ரவரி 14 அன்று எனக்குத் திருமணம் என்று நினைப்பவர்களுக்கு அது ஒரு ‘ஏப்ரல் ஃபூல்’ ஜோக் ஆகத்தான் அமையும்” என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார்.

மேலும் “இன்று எனக்கு நலங்கு (Haldi) விழா, நாளை சங்கீத் நிகழ்ச்சி. எல்லாரும் சாப்பாட்டை முடித்துவிட்டுச் செல்லுங்கள்” என அவர் கிண்டலாக, விளையாட்டாகக் கூறி வதந்திகளுக்கு நகைச்சுவையாக பதிலடியும் முற்றுப்புள்ளியும் வைத்தார்.

இதைக் கேட்ட அவரது சக நடிகர் சித்தாந்த் சதுர்வேதி, “பிப்ரவரி 14 அன்று மணமகன் கோலத்தில் மிருணாள் வீட்டின் முன் வரிசையில் நில்லுங்கள்” என மேலும் நகைச்சுவையாக கூறியுள்ளார்.

தொடர்ந்து தனது குடும்பத்தில் நடக்கும் திருமணப் பேச்சுகள் குறித்துப் பகிர்ந்த மிருணாள், “நேற்று கூட என் தந்தையிடம் எனக்கொரு வரன் தேடுங்கள் என்று கூறிவிட்டேன்.

அவரோ என்னையே தேடிக்கொள்ளச் சொல்கிறார். ஒரு சரியான நபரை இன்னும் அடையவில்லை என்பதே உண்மை. நிழல் படக் கேரக்டரை போலவே, நிஜத்திலும் திருமணத்திற்காக மட்டும் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

ஒருவருடன் அமைதியாக இருக்கும்போது கூட அந்த மௌனம் நமக்குத் தொந்தரவாகத் தெரியாதோ, அவர்தான் சரியான இணை.

அந்த நேரம் வரும்போது நிச்சயம் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார். தற்போது தான் சிங்கிளாக இருப்பதை உறுதி செய்த மிருணாள்,

எனக்குக் காதல் என்ற உணர்வு மிகவும் பிடிக்கும். நான் காதலில் விழும்போது, அதை முழு உலகிற்கும் பெருமையுடன் அறிவிப்பேன். அந்தத் தருணத்திற்காக நானும் காத்திருக்கிறேன் என கூறியுள்ளார்.

மிருணாள் தாக்கூர் மற்றும் சித்தாந்த் சதுர்வேதி நடித்துள்ள ‘தோ தீவானே ஷெஹர் மேன்’ திரைப்படம் வரும் பிப்ரவரி 20 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply