கவிஞர் கண்ணதாசன், ஒரு பாடலை 10 நிமிடத்தில் எழுதி முடித்தார். அது என்ன பாடல் தெரியுமா?

கவியுலகின் கலக்கல் நாயகனாக திகழ்ந்தவர், கண்ணதாசன். இவர், எம்.ஜி.ஆர், நாகேஷ் உள்ளிட்ட பலருடைய படங்களுக்கு பாடல் எழுதி கொடுத்திருக்கிறார். இதையடுத்து, அவர் ஒருமுறை 10 நிமிடத்தில் எழுதிய ஒரு பாடல், பெரிய ஹிட் அடித்தது. அது என்ன பாடல் தெரியுமா? இங்கு பார்ப்போம்.

காலங்கள் பல கடந்தும், Gen Z தலைமுறையினராலும் கொண்டாடப்படும் கவிஞராக இருக்கிறார் கண்ணதாசன். இவர், மொத்தம் 4500பாடல்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார்.

கண்ணதாசனின் பாடல்களா பல, மன அமைதியை கொடுக்கும் என்றும், எந்த மனநிலையில் இருந்தாலும் அது அமைதியை கொடுக்கும் சூழ்நிலையாக மாறிவிடும் என்றும் இவரது ரசிகர்கள் கூறுவதுண்டு.

கண்ணதாசன், 16 வயதிலேயே சென்னைக்கு ஓடி வந்தவர். நடிப்பு மீதிருந்த ஆர்வத்தால் சினிமாவில் வாய்ப்பு தேடினார். அவருக்கு கன்னியின் காதலி படத்தில் கலங்காதிரு மனமே எனும் பாடல் மூலம், எழுத வாய்ப்பு கிடைத்தது.

ஏராளமான நூல்களையும், பாடல்களையும் எழுதியிருக்கும் கண்ணதாசன், இறப்பதற்கு பல ஆண்டுகளூக்கு முன்பே தனக்காக இரங்கற்பா எழுதியிருக்கிறார்.

கண்ணதாசன், தனது ஒரு படத்திற்கு பாடல் எழுத வேண்டுமென, இயக்குநர் ஸ்ரீதர் முடிவு செய்துள்ளார். அப்போது, கண்ணதாசனை தொடர்பு கொண்டுள்ளார்.

ஊருக்கு போக வேண்டுமென அவசரத்தில் இருந்த கண்ணதாசன், தான் 5000த்திற்கு அலைந்து கொண்டிருப்பதாகவும் கூறியிருந்தார். அப்போது நீங்கள் இங்கு வந்து பாட்டெழுதி கொடுத்தால் பணம் தருகிறேன் என சொன்னதாகவும் கூறப்படுகிறது.

அப்படி அவர் ரயில் பிடிக்கும் அவசரத்தில் 10 நிமிடத்தில் எழுதிக்கொடுத்த பாடல்தான், முத்தான முத்தல்லவோ. இந்த பாடலுக்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்தார்.

இந்த பாடல், அந்த படத்தில் பெரிய ஹிட் அடித்த பாடலாகும். இது, காலம் கடந்தும் பலருக்கு கருத்து சொல்லும் பாடலாக இருக்கிறது.

 

Share.
Leave A Reply