பொதுவாக சினிமாவில் பெரிய பட்ஜெட், முன்னணி நட்சத்திரங்கள், பெரிய நிறுவனம் என எதுவும் தேவையில்லை.
கதை சிறப்பாக இருந்தால், யார் தடுத்தாலும் அந்த படம் பெரிய வெற்றியை பெறும். இதற்கு உதாரணமாக பல படங்களை சொல்லலாம்.
அந்த வகையில் ஒரு படம் தான் இது. பெரிய நட்சத்திரங்கள் இல்லை. 17 வயது பெண்ணை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து எடுத்த இந்த படம் 15 கோடியில் தயாராகி 900 கோடி வசூலித்துள்ளது.
இந்தப் படத்தில் பெரிய பட்ஜெட் இல்லை, முன்னணி நட்சத்திரங்கள் இல்லை, அதிக விளம்பரங்களும் இல்லை. ஆனாலும், வசூலில் சாதனை படைக்கக் காரணம் இதன் ஈர்க்கக்கூடிய திரைக்கதைதான்.
சுமார் 9 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தப் படம், அதன் ஆழமான கதை மற்றும் திரைக்கதையால், பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து என்று சொல்லலாம். ஒரு சிறுமியை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட படம் இவ்வளவு பெரிய வசூலை எப்படி ஈட்டியது என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

2017-ல் அத்வைத் சந்தன் இயக்கத்தில், வெளியான ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ (Secret Superstar) என்ற திரைப்படம் தான் இந்த சாதனையை படைத்துள்ளது.
ஆமிர் கான் தயாரித்த இந்த படத்தில் 17 வயதான ஜைரா வாசிம் முதன்மை கேரக்டரில் நடித்திருந்தார்.
பாடகியாக வேண்டும் என்று கனவு கனவுடன் இருக்கும் ஒரு பள்ளி சிறுமி, தனக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்தி, பாடிய பாடல்களை பாடி யூடியூபில் பதிவேற்றுகிறாள். ஆனால் தனது முகத்தை மறைத்துக்கொள்கிறாள். தனது குரலின் மூலம் அவள் ஒரே இரவில் புகழ்பெற்றவள் ஆகிறாள்.
அதன் பிறகு அவளது வாழ்க்கையில் நடக்கும் மாற்றங்களே இந்தப் படத்தின் கதை. ஆணாதிக்கம், பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் தாய்-மகள் இடையிலான உணர்ச்சிகரமான உறவை இந்தப் படம் அழகாகப் பேசியது.
ஒரு கொடுமைக்கார தந்தையிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஒரு தாயும் மகளும் நடத்தும் போராட்டத்தை இந்தப் படம் சித்தரித்தது.
இந்தியாவில் மட்டுமல்லாமல், சீனாவிலும் இந்தப் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தியது: இந்தியா ரூ65 கோடி வசூலித்த இந்த படம், சீனாவில் ரூ750 கோடியும், ஹாங்காங்கில், 65 கோடியும் வசூலித்துள்ளது.
இந்த படத்தின் தயாரிப்பாளர் ஆமிர்கான் ஒரு முக்கிய கேமியோ கேரக்டரில் நடித்திருந்தார், ஆமிர் கானுடன் ‘தங்கல்’ மற்றும் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ என இரண்டு மெகா ஹிட் படங்களில் நடித்த ஜைரா வசீம், தனது 18-வது வயதிலேயே சினிமாத்துறையை விட்டு விலகினார்.
‘தி ஸ்கை இஸ் பிங்க்’ அவரது கடைசிப் படமாகும். நடித்தது 3 படம் தான் என்றாலும், ஜைரா வசீம் நடித்த ‘தங்கல்’ மற்றும் ‘சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ ஆகிய இரண்டு படங்கள் மட்டும் இணைந்து உலகளவில் சுமார் ₹3000 கோடி வசூலித்தது ஒரு வரலாற்று சாதனை தான்.

