-வெட்­கப்­பட வேண்­டிய விவ­காரம்

தமிழ்த் தரப்­பு­களை ஒரே நிலைப்­பாட்­டுக்குள் கொண்டு வரும் ஒரு முயற்­சியில், சுவிட்­சர்­லாந்து அர­சாங்கம் இறங்­கி­யி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யா­கிய குறு­கிய காலத்­துக்­குள்­ளேயே அந்த முயற்­சிகள் முடங்­கி­யி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த முயற்­சியின் ஒரு கட்­ட­மாக, பெப்­ர­வரி 19 ஆம் திகதி, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி, ஜன­நா­யக தமிழ்த் தேசிய கூட்­டணி ஆகி­ய­வற்­றுக்கு இடையில், ஒரு சந்­திப்பை நடத்­து­வ­தற்கு திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­தது.

ஆனால், இந்தச் சந்­திப்பு திட்­ட­மிட்­ட­படி நடப்­ப­தற்கு வாய்ப்­பில்லை என தக­வல்கள் கூறு­கின்­றன.

இந்த முயற்சி பிற்­போ­டப்­ப­டு­வ­தற்கு அல்­லது குழப்­பத்­துக்குள் சிக்­கு­வ­தற்கு காரணம், தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியே என்று ஒரு தரப்பு குற்றம் சாட்­டு­கி­றது.

அதே­வேளை, இந்தச் சந்­திப்பை நிறுத்­து­மாறு, தமிழ் அரசுக் கட்­சியின் பதில் பொதுச்­செ­ய­லாளர் எம்.ஏ.சுமந்­தி­ரனே சுவிஸ் தூது­வ­ரிடம் வலி­யு­றுத்­தினார் என்று இன்­னொரு தகவல் கூறு­கி­றது.

இந்தச் சந்­திப்­புக்கு முன்­ன­தாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி அனைத்து தமிழ் கட்­சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்­பு­களை, யாழ்ப்­பா­ணத்தில் ஒரு சந்­திப்­புக்கு அழைப்பு விடுத்­துள்­ளது.

இன்று நடை­பெறும் இந்த சந்­திப்­புக்­கான அழைப்பு விடுக்­கப்­பட்­டி­ருந்த சூழ­லி­லேயே, இதனை காரணம் காட்டி சுவிஸ் தூத­ர­கத்தின் ஏற்­பாட்­டி­லான கூட்­டத்தை நிறுத்­து­மாறு, சுமந்­திரன் கேட்டுக் கொண்­ட­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

தமிழ்த் தேசிய கட்­சி­க­ளுக்கு இடை­யி­லான, போட்டி, பொறாமை, பூசல்கள் எந்­த­ள­வுக்கு மோசம் அடைந்­தி­ருக்­கின்­றன என்­பதை இதி­லி­ருந்து உணர முடி­கி­றது.

தமிழ்த் தேசிய கட்­சி­களை ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்­கான, ஒரு வெளிப்­புற தலை­யீடு உரு­வா­கி­யுள்­ளதே வெட்­கக்­கே­டா­னது.

தமிழர் தரப்பு ஒற்­று­மை­யில்­லா­தது என்ற கருத்து தமிழ் மக்­களின் மத்­தியில் மாத்­தி­ர­மல்ல, சர்­வ­தேச அள­விலும் ஏற்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை இது உணர்த்­து­கி­றது.

தமிழ் மக்­களின் சார்பில் பாரா­ளு­மன்­றத்தில் பிர­தி­நி­தித்­துவம் வகிக்­கின்ற கட்­சிகள் மூன்று மாத்­தி­ரமே.

இந்த மூன்று தமிழ்த் தேசிய கட்­சி­களும் தமிழ் மக்­களின் பிரச்­சி­னைகள் தொடர்­பாக, நிலைப்­பா­டுகள் தொடர்­பாக, அபி­லா­ஷைகள் தொடர்­பாக ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்கு வர முடி­யாமல் இருக்­கின்­றன.

இது ஒன்றும் அவர்­களின் கொள்கை ரீதி­யான பிரச்­சினை அல்ல. கோட்­பாட்டு ரீதி­யாக இந்தக் கட்­சி­க­ளுக்கு இடையில் மிகப்­பெ­ரிய வேறு­பாடு கிடை­யாது.

சமஷ்டி அர­சியல் தீர்வை வலி­யு­றுத்­தியே, அர­சியல் நடத்­து­கின்­றவை, ஒற்­றை­யாட்­சியை எதிர்ப்­பவை.

ஆனாலும், தமி­ழரின் அபி­லா­ஷைகள் அர­சியல் தீர்வு விட­யத்தில், இந்தக் கட்­சி­களால் ஒரு­மித்து செயற்­பட முடி­ய­வில்லை.

ஒரே கோட்டில் நின்று பேச முடி­ய­வில்லை. ஒரே மேசையில் அமர்ந்து கலந்­து­ரை­யாட முடி­ய­வில்லை.

இதுவே இன்று தமிழர் பிரச்­சி­னைக்கு தீர்வு காண முடி­யாத நிலைக்கு காரணம்.

தமக்குள் ஒரு நிலைப்­பாட்­டுக்குள் வர முடி­யாத தமிழ்க் கட்­சி­களால் எவ்­வாறு சிங்­கள அர­சியல் தரப்­பு­க­ளுடன் பேசி ஓர் இணக்­கப்­பாட்­டுக்கு வர முடியும்?

தமிழ்த் தேசிய கட்­சிகள் ஒன்­று­ப­டாமல் இருக்­கின்ற விடயம், இரா­ஜ­தந்­திர மட்­டத்தில் பார­தூ­ர­மான ஒன்­றாக பார்க்­கப்­ப­டு­கி­றது.

சுவிஸ் தூது­வரின் தலை­யீட்­டுக்கு முன்னர், இந்­தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவும் இதே கருத்தைக் கூறி­யி­ருந்தார்.

தமிழ்க் கட்­சிகள் ஒரு­மித்து மாகாண சபை தேர்­தல்­களை வலி­யு­றுத்­தினால், அதற்கு நட­வ­டிக்கை எடுக்க முடியும் என அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

அது மாகாண சபை தேர்தல் தொடர்­பான விவ­கா­ர­மாக இருந்­தாலும், தமிழ்க் கட்­சிகள் ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்கு வர வேண்டும் என்ற அவ­ரது கருத்து, கட்­சி­களின் பிளவு நிலையை முதன்­மைப்­ப­டுத்­தி­ய­தா­கவே இருந்­தது. இப்­போது, சுவிஸ் தூதுவர் இந்த முயற்­சியில் இறங்­கு­வ­தற்கும் அதுவே காரணம்.

தமிழ்க் கட்­சிகள் ஒரே நிலைப்­பாட்டில் இல்­லாத கார­ணத்­தினால், அதனை அர­சாங்­கமும், பிற தரப்­பு­களும் சாத­க­மாக பயன்­ப­டுத்­து­கின்ற சூழல், உள்­ளது.

தமிழ்க் கட்­சிகள் ஓர­ணி­யாக திரண்டு போரா­டு­வ­தில்லை, தமது கோரிக்­கை­களை வலி­யு­றுத்தி தொடர்ச்­சி­யான போராட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தில்லை. இது அர­சியல் ரீதி­யாக அர­சாங்­கத்­துக்கு நெருக்­கடி கொடுப்­பதை தவிர்த்து வரு­கி­றது.

தமிழ்க் கட்­சி­களின் இந்த பிளவு நிலை அல்­லது தங்­களின் சொந்த விவ­கா­ரங்­களை கையா­ளு­வ­தற்கு கொடுக்­கின்ற முக்­கி­யத்­துவம், பிர­தான பிரச்­சி­னை­களில் இருந்து கவனம் திசை திருப்­பு­வ­தற்கு கார­ண­மா­கி­றது.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இனப்­பி­ரச்­சி­னைக்­கான தீர்வு முக்­கி­ய­மா­னது. அது எட்­டப்­ப­டாத வரை, தமிழ் மக்­க­ளுக்கும் நிம்­ம­தி­யான வாழ்வு கிடைக்­காது, இலங்­கை­யிலும் நிலை­யான அமைதி ஏற்­ப­டாது.

அதனால் இந்த முயற்­சியில் தமிழ்க் கட்­சி­களை ஓர­ணி­யாகத் திரட்­டு­வ­தற்­காக சுவிஸ் அர­சாங்கம் முயற்­சித்­தி­ருக்­கலாம்.அல்­லது வேறு கார­ணங்­களும் இருக்­கலாம்.

ஆனால், இது இலங்கை அர­சுக்கும் விடு­தலைப் புலி­க­ளுக்கும் இடையில் மத்­தி­யஸ்தம் வகித்த நோர்­வேயின் முயற்­சி­யுடன் இதனை ஒப்­பிட முடி­யாது.

அது வர­லாற்று ரீதி­யாக பிள­வு­பட்­டி­ருக்கும் இரண்டு தேசிய இனங்­களைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­திய அதி­கார அல­கு­க­ளுக்­கி­டை­யி­லான மத்­தி­யஸ்த முயற்சி.

இது தமிழ் தரப்­பு­க­ளுக்கு இடையே ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­கின்ற முயற்சி.

தமிழ்த்­த­ரப்பு ஒற்­று­மை­யின்றி செயற்­ப­டு­வது, அதற்கு பிற­த­ரப்­பினர் மத்­தி­யஸ்தம் வகிக்­கின்ற அள­வுக்கு சூழல் இருப்­பது, கவ­லைக்­கு­ரிய விடயம்.

தமிழ் மக்­களின் நலன்­களின் மீது அக்­கறை கொண்ட தரப்­பு­க­ளாக இருந்தால், அடிப்­படை அபிலாஷைகள் விட­யத்தில் ஒன்­று­பட்டு, ஒரு தீர்வை முன் வைப்­ப­தற்கு தயா­ராக இருக்க வேண்டும்.

ஆனாலும், இந்த முயற்­சியில் சுவிஸ் அரசு இறங்க வேண்­டிய நிலை ஏன் வந்­தது?

அவர்­களின் முயற்­சியை குழப்ப வேண்­டிய நிலை ஏன் வந்­தது?

இதை­யிட்டு, தமிழ்க் கட்­சிகள் முதலில் தங்­க­ளுக்குள் ஆராய வேண்டும். தங்­களைச் சுய­ப­ரி­சோ­தனை செய்து கொள்ள வேண்டும்.

தங்­களைத் தாங்­களே யதார்த்­த­வா­தி­க­ளா­கவும், கொள்­கை­வா­தி­க­ளா­கவும், தேசப்­பற்­றா­ளர்­க­ளா­கவும், காட்டிக் கொள்­ப­வர்கள்- அதனைத் தாண்டி, தமிழ் மக்­க­ளுக்­கான அர­சி­யலை எவ்­வாறு பலப்­ப­டுத்­து­வது என்­பதைச் சிந்­திக்க வேண்டும்.

கடந்த பாரா­ளு­மன்ற தேர்­த­லுக்குப் பின்னர், எழுந்த புதிய அர­சியல் சூழல், தமிழ் மக்­களின் சார்பில் முன்­வைப்­ப­தற்­கான அர­சியல் தீர்வு ஒன்றை வரை­ய­றுக்க வேண்­டிய நிலையைத் தோற்­று­வித்­தது.

தற்­போ­தைய அர­சாங்­கத்தை யாரும் குறைத்து மதிப்­பிடக் கூடாது.

அது மிக மிக ஆபத்­தான ஒன்று என்­பதை தமிழ் கட்­சிகள் புரிந்து கொள்ள தவறி இருக்­கின்­றன.

கடந்த கால அர­சாங்­கங்­களை விட, இந்த அர­சாங்கம் ஆபத்­தான பல அஸ்­தி­ரங்­களை தமி­ழர்கள் மீது செலுத்­து­வ­தற்கு தயா­ராக இருக்­கி­றது. அதற்­கான பலம் அத­னிடம் இருக்­கி­றது.

இந்­த­நி­லையில் அர­சியல் தீர்வு தொடர்­பான தீர்க்­க­மான ஒரு வழி வரை­ப­டத்தை உரு­வாக்க வேண்­டிய சூழல் தமிழர் தரப்­புக்கு இருக்­கி­றது.

அதற்­கான முயற்­சியை கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் தலை­மை­யி­லான தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி ஆரம்­பித்த போது, அதற்கு தமிழ் அரசுக் கட்சி முதலில் இணங்கி வர­வில்லை. அதனால் அந்த முயற்சி தடை­பட்­டது.

அதற்குப் பின்னர், அண்­மையில் தமிழ் அரசுக் கட்சி அவ்­வா­றான ஒரு முயற்­சியை முன்­னெ­டுத்­தது.

அந்தச் சந்­திப்பும் இடை­ந­டுவில் நின்ற சூழலில் இப்­பொ­ழுது சுவிட்­சர்­லாந்து அர­சாங்­கத்தின் ஒன்­று­ப­டுத்தும் முயற்சி நடந்து கொண்­டி­ருக்­கி­றது.

இந்தச் சூழலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி ஒரு பரந்­து­பட்ட கலந்­து­ரை­யா­டலை நடத்­து­வ­தற்கு எடுத்த முடிவை காரணம் காட்டி, சுவிஸ் ஏற்­பாட்டில் நடக்­க­வி­ருந்த கூட்டம் குழப்­பப்­பட்­டி­ருக்­கி­றது.

இந்த கூட்டம் நடக்­குமா-, நடக்­காதா என்­ப­தல்ல பிர­தான விடயம்.

இது ஏன் குழப்­பப்­ப­டு­கி­றது?

ஏன் இத்­த­கைய ஒற்­றுமை முயற்­சி­க­ளுக்கு எதிர்ப்பு தெரி­விக்­கப்­ப­டு­கி­றது?

ஒரு­மித்த நிலைப்­பாட்­டுக்கு வரு­வ­தற்கு ஏன் தயக்கம் காட்­டப்­ப­டு­கி­றது?

இவை அனைத்தும் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்­டிய விட­யங்கள்.

தமிழ் தேசிய தரப்­புகள் ஒன்­று­ப­டு­வது மட்­டுமே, தமிழ் மக்­களின் இன்­றைய கன­வாக இருக்­கி­றது.

ஏனென்றால் அது ஒன்று மாத்­தி­ரமே தமி­ழரின் பிரச்­சி­னைக்கு நியா­ய­மான தீர்வை தேடு­வ­தற்­கான வழி­யாக இருக்கும்.

ஆனால், தமிழ் தேசிய அர­சியல் பரப்பில் உள்ள கட்­சிகள் மத்­தியில் அத்­த­கைய அக்­கறை இருக்­கி­றதா என்­பது சந்­தேகம்.

அவை சுய­நல நோக்கில் செயல்­ப­டு­வதும், உள்­ளக முரண்­பா­டு­களில் கவனம் செலுத்­து­வதும், தனி நபர்­களின் ஆதிக்­கத்தின் மீது அக்கறை கொள்வதுமே, அவற்றின் செயற்பாடுகளாக இருக்கின்றன.

இனப் பிரச்சினை தீர்வு அல்லது தமிழர் பிரச்சினைக்கான தீர்வுகளை அடையும் விடயத்தில் தமிழ்க் கட்சிகள் முழு அக்கறை செலுத்தவில்லை.

அத்தகைய அக்கறையை செலுத்துகின்ற ஒரு கூட்டு செயற்பாட்டை முன்னெடுக்க முயன்ற போதும் கூட அதனையும் குழப்பி விடுகிறது தமிழ்த்தரப்பு.

தமிழ்த் தரப்பை ஒன்றுபடுத்துவதற்கான முயற்சிகள் முக்கியமல்ல, ஒற்றுமைப்படுவதற்கான விருப்பமே முக்கியமானது.

அத்தகைய விருப்பநிலை தமிழ் கட்சிகளுக்கு இருக்கிறதா என்ற சந்தேகமே இப்பொழுது ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்க் கட்சிகளை ஒருங்கிணைக்க கூடிய வலுவான சிவில் சமூகத் தரப்பு ஒன்று தமிழர் மத்தியில் இல்லாதிருப்பது பெரும்குறை.

இந்த சூழலில் சுவிஸ் அரசு அதற்கான அடித்தளத்தை ஏற்படுத்த முனைந்த நிலையில் தான், குழப்பம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

இதற்கு யார் காரணமாக இருந்தாலும், விளைவு என்னவோ தமிழருக்கான பாதிப்பாகவே இருக்கப் போகிறது.

 

-கண்ணன்-

Share.
Leave A Reply