நடிகை திரிஷா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன். அதற்காக மனப்பூர்வமாக வருத்து தெரிவித்து கொள்கிறேன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன், பாவம் விஜய் அனுபவம் இல்லாதவர்.முதலில் வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும்.
திரிஷா வீட்டில் இருந்து வெளியே வர வேண்டும். குடும்பத்தோடு நல்ல உறவு வைக்க வேண்டும் என சர்ச்சைக்குரிய வகையில் அவர் பேசி இருந்தார். நயினார் நாகேந்திரனின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனம் வந்தன.
திரிஷா எக்ஸ் பதிவு
இந்த சூழலில், இன்று (பிப்ரவரி 16) நடிகை திரிஷா, அவர் குறித்து அருவருக்கத்தக்க பேச்சுக்கு எக்ஸ் தளத்தின் மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
அவர் மரியாதை குறைவான செயல்கள் எப்போது தட்டிக் கேட்கப்பட வேண்டியவை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாநில அரசியலில் இருக்கும் ஒருவர் இப்படி கீழ்த்தரமான கருத்தை தெரிவிப்பார் என ஒருபோதும் தான் எதிர்பார்க்கவில்லை என கூறி இருக்கிறார்.
அதேபோல் திரிஷா தான், எந்த கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல. எதிர்காலத்திலும் கட்சியில் சேரும் எண்ணமும் தனக்கு இல்லை என்பதை அவர் திட்டவட்டமாக கூறுகிறேன்.
இதுவரை இருந்ததுபோல் அரசியலில் எப்போதும் நடுநிலையாக இருப்பதையே விரும்புகிறேன். அரசியல் அடையாளம் தேவையில்லை. நடிப்பின் மூலம் கிடைக்கும் அடையாளமே போதும்.
ஒருவடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பொதுவெளியில் பேச கூடாதது. உயர் பதவியில் இருப்பவர்கள் பொதுவெளியில் பேசும்போது பொறுப்புடன் பேச வேண்டும். மேலும், தனக்கு தொடர்பில்லாத விவகாரங்களில் எனது பெயரை தொடர்பு படுத்த வேண்டாம் என திரிஷா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நயினார் நாகேந்திரன் மன்னிப்பு
இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து வாய் தவறி பேசிவிட்டேன். அதற்காக மனப்பூர்வமாக வருத்து தெரிவித்து கொள்கிறேன் என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இன்று பேசிய அவர், எனது அரசியல் வாழ்க்கையில் யாரும் யாரையும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க அனுமதிப்பதில்லை.
நான் அவ்வாறு பேசியதில்லை. அன்று பேசியது எனது வாய் தவறி வந்தது. பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் என்னிடம் இது குறித்து பேசி இருந்தார். முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையும் பேசி இருந்தார்.
எனவே உண்மையில் இதனால் யாரேனும் வருத்தப்படுவார்களேயானால் நான் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

