உலகின் நம்பர் ஒன் பணக்கார குடும்பம் எது? அந்த குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அமெரிக்க நிறுவனமான வால்மார்ட் (Walmart-அங்காடி நிறுவனம்) உலகின் முன்னணி ரீடைல் நிறுவனமாக உள்ளது. 1962ம் ஆண்டு சாம் வால்டனினால் உருவாக்கப்பட்டு தற்போது உலகின் மிக பெரிய ரீடைல் சாம்ராஜ்யமாக உள்ளது.
நிறுவனர் சாம் வால்டன் 1992ம் ஆண்டு உயிரிழந்த பின்னர் அவரின் வாரிசுகள் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
உலகம் முழுவதும் 10,500 வால்மார்ட் ரீடைல் ஸ்டோர் உள்ளது. உலகின் முன்னணி ரீடைல் (Retail) நிறுவனமாக மட்டுமல்லாமல் உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர குடும்பமாகவும் வால்மார்ட் குடும்பம் உள்ளது.
குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் சொத்து மதிப்பை கேட்டாலே மயக்கத்தை ஏற்படுத்தும் என்றே சொல்லலாம்.
அந்த வகையில் வால்மார்ட் நிறுவனத்தின் மொத்த சொத்து மதிப்பு என்ன? சாம் வால்டன் வாரிசுகளின் சொத்து மதிப்பு என்ன என்பதை பார்ப்போம்.

ஆலிஸ் வால்டன்: சாம் வால்டனின் மகளான ஆலிஸ் வால்டனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 154 மில்லியன் டாலராகும். இவர், உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர பெண்ணாகவும் உள்ளார்.
ஜிம் வால்டன்: சாம் வால்டனின் மூத்த மகன் ஜிம் வால்டனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 15.8 மில்லியன் டாலராகும்.

ராப் வால்டன்: சாம் வால்டனின் மகனும், வால்மார்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான ராப் வால்டனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 15.4 மில்லியன் டாலராகும்.
கிறிஸ்டி வால்டன்: மறைத்த ஜான் வால்டனின் மனைவி கிறிஸ்டி வால்டனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 25.4 மில்லியன் டாலராகும். உலகின் டாப் பணக்காரர்களின் லிஸ்டில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லூகாஸ் வால்டன்: சாம் வால்டனின் பேரன் லூகாஸ் வால்டனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 5.39 மில்லியன் டாலராகும். உலகின் டாப் பணக்காரர்களின் லிஸ்டில் 33வது இடத்தில் உள்ளார்.
வால்மார்ட் குடும்பம்: இறுதியாக, உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வர குடும்பமாக இருக்கும் வால்மார்ட் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 545 பில்லியன் டாலராகும். அதேபோல் அம்பானி குடும்பம் 105.6 பில்லியன் டாலருடன் 8ம் இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

