“இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. 20 அணிகள் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பிரிவிலும் 5 அணிகள் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு பிரிவில் உள்ள அணிகள் அதே பிரிவுகளில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதவேண்டும்.

அதனடிப்படையில் ஒரு அணி 4 போட்டிகளில் விளையாட வேண்டும்.ஒரு பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 8-க்கு முன்னேறும். சூப்பர் 8 இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

பொதுவாக முதல் இரண்டு குரூப்பில் இருந்து 4 அணிகளும், 2-வது குரூப்பில் இருந்து 4 அணிகளும் என பிரிக்கப்படும்.ஆனால் இந்த முறை அவ்வாறு குரூப் 8 சுற்று பிரிவுகள் பிரிக்கப்படவில்லை.

ஐசிசி தரவரிசை அடிப்படையில் ஆஸ்திரேலியா, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 8 அணிகளை வைத்தது குரூப் 1 மற்றும் குரூப் 2 எனப் பிரிக்கப்பட்டுள்ளது.குரூப் 1-ல் ஆஸ்திரேலியா,

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடம் பிடித்துள்ளன. குரூப் 2-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்துள்ளன.

இதில் ஏதாவது ஒரு அணி தகுதி பெறவில்லை என்றால் அதற்குப் பதிலாக லீக் குரூப் போட்டியில் தகுதி பெறும் அணி இடம் பெறும்.உதாரணத்திற்கு “பி” பிரிவில் ஜிம்பாப்வே அடுத்த சுற்றுக்கு முன்னேற இருக்கிறது.

இந்த சுற்றில் உள்ள ஆஸ்திரேலியா சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற வாய்ப்பில்லை. இதனால் ஆஸ்திரேலியாவுக்குப் பதிலாக ஜிம்பாப்வே குரூப் 1-ல் இடம் பெறும்.”,

Share.
Leave A Reply